මූලාශ්රයක් යාවත්කාලීන විය
JXG, இலங்கை வர்த்தக சம்மேளனத்துடன் இணைந்து, தேசிய தொழில்முனைவோர் அபிவிருத்தியை முன்னெடுப்பதற்காக BREAKTHROUGH திட்டத்தை ஆரம்பிக்கின்றது
JXG (ஜனசக்தி குழுமம்), இலங்கை வர்த்தக சம்மேளனத்துடன் இணைந்து, BREAKTHROUGH எனும் தேசிய தொழில்முனைவோர் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பித்துள்ளது.
සාරාංශය
இலங்கையின் பொருளாதார முன்னேற்றமானது போட்டித்தன்மை மிக்க வணிக நிறுவனங்களை மேம்படுத்தல், வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துதல், புதிய தொழில்துறைகளை உருவாக்குதல் மற்றும் உள்நாட்டுச் சந்தைகளுக்கு அப்பால் வணிக வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் ஆகியவற்றில் தங்கியுள்ள இன்றைய சூழலில், நாட்டின் தொழில்முனைவோரின் திறமைகளுக்கு ஆதரவளிப்பதில் தனியார் துறையின் முக்கிய பங்களிப்பாக BREAKTHROUGH திட்டம் அமைந்துள்ளது.
