මූලාශ්රයක් යාවත්කාලීන විය
சபோரிஷியா அணுமின் நிலையத்தின் வெளிப்புற மின்விநியோகம் துண்டிப்பு
தென்கிழக்கு உக்ரைனிலுள்ள ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் சபோரிஷியா அணுமின் நிலையம் வெளிப்புற மின் விநியோகத்தை இழந்துவிட்டதாக அந்நிலையத்திற்கு ரஷ்யாவால் நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகம் நேற்று தெரிவித்துள்ளது.
සාරාංශය
தானியங்கி பாதுகாப்பு கட்டமைப்பு மூலம் பெரோஸ்ப்லாவ்னா மின் இணைப்பு நிறுத்தப்பட்டுள்ளதாகவும், நிலையத்தின் பாதுகாப்பான செயல்பாட்டிற்குத் தேவையான உபகரணங்களுக்கு மாற்று டீசல் ஜெனரேட்டர்கள் மூலம் மின்சாரம் வழங்கப்படுவதாகவும் அந்நிர்வாகம் கூறியுள்ளது. சபோரிஷியா அணுமின் நிலையத்தில் உள்ள பணியாளர்கள், உபகரணங்களின் அனைத்து செயல்பாடுகளையும் கண்காணித்து வருகின்றனர்.