මූලාශ්රයක් යාවත්කාලීන විය
கடலில் பழுதடைந்த சரக்குக் கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டது
நடுக்கடலில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாகச் செயலிழந்த சரக்குக் கப்பல் ஒன்று, ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்துக்குப் பாதுகாப்பாகக் கொண்டுவரப்பட்டுள்ளது.
සාරාංශය
எல் ஜிப்ரால்டர்' (MV AAL Gibraltar) என்ற சரக்குக் கப்பலின் இயந்திர அறைக்குள் நீர் புகுந்தமையால், கப்பல் செயலிழந்துள்ளது. இதனையடுத்து, கப்பலைப் பாதுகாப்பாக ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்குக் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. நடுக்கடலில் செயலிழந்த இந்தக் கப்பல், 4 இழுவைப் படகுகளின் (Tug boats) உதவியுடன் துறைமுக வளாகத்திற்குள் இழுத்து வரப்பட்டுள்ளது.
