මූලාශ්රයක් යාවත්කාලීන විය
உள்நாட்டுத் திரவப் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கு கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தினால் வேலைத்திட்டம் முன்னெடுப்பு
கால்நடைகள் மற்றும் எருமைகளின் எண்ணிக்கை குறைவடைவதால் உள்நாட்டுத் திரவப் பால் உற்பத்திக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைப்பதற்காக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் மூலம் கால்நடைகளின் உற்பத்தித்திறனையும் பண்ணைகளின் உற்பத்தித்திறனையும் அதிகரிக்க முடியும் என விவசாயம் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் கௌரவ நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.
සාරාංශය
பசுக்கள் மற்றும் எருமைகளின் எண்ணிக்கை குறைவடைவது திரவப் பால் உற்பத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், கால்நடைகளின் உற்பத்தித்திறனையும் பண்ணைகளின் உற்பத்தித்திறனையும் அதிகரிப்பதன் மூலம் அந்தப் பாதிப்பைக் குறைக்க முடியும் எனத் தெரிவித்த பிரதி அமைச்சர், 2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025 ஆம் ஆண்டில் பசுக்கள் மற்றும் எருமைகளின் எண்ணிக்கை குறைவடையவில்லை என்றாலும், 2021 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அவற்றின்…
