මූලාශ්රයක් යාවත්කාලීන විය
American Premium Water நிறுவனம் நான்கு தங்க விருதுகள் சுவீகரிப்பு
American Premium Water நிறுவனம், அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த Dragons of Sri Lanka விருதுகள் 2026 இல் நான்கு விருதுகளை சுவீகரித்திருந்தது. இதில் மூன்று Gold Dragons மற்றும் ஒரு Black Dragon ஆகிய விருதுகள் அடங்கியிருந்தன.
සාරාංශය
பெருமைக்குரிய Dragons of Asia விருதுகளின் அங்கமாக அமைந்துள்ள Dragons of Sri Lanka, நிகழ்வின் பிராந்திய கட்டமைப்பை உள்நாட்டு சந்தைக்கு கொண்டு வருவதுடன், புத்தாக்க மற்றும் வினைத்திறனான சந்தைப்படுத்தல் தொடர்பாடல்களை கொண்டாடும் வகையில் அமைந்துள்ளது. 2000 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட Dragons of Asia, ஆசியாவின் முன்னணி பெறுபேறுகள் அடிப்படையிலான சந்தைப்படுத்தல் விருதுகள் வழங்கும் நிகழ்வுகளில் ஒன்றாக அமைந்துள்ளது.