මූලාශ්රයක් යාවත්කාලීන විය
சீரற்ற வானிலையால் 21,000க்கும் அதிகமானோர் பாதிப்பு - இருவர் பலி!
நிலவிய சீரற்ற வானிலை காரணமாக இதுவரையில் 5,829 குடும்பங்களைச் சேர்ந்த 21,452 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
සාරාංශය
இதன்படி நாட்டின் 19 மாவட்டங்களிலுள்ள 147 பிரதேச செயலகப் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிலையம் தெரிவித்துள்ளது. சீரற்ற வானிலையால் இரத்தினபுரி மாவட்டமே அதிகளவு பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதுடன், அங்குள்ள 15 பிரதேச செயலகப் பிரிவுகளில் 2,666 குடும்பங்களைச் சேர்ந்த 10,051 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
