මූලාශ්රයක් යාවත්කාලීන විය
சட்டவிரோதமாக நாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட பீடி இலைகள் தொகை கற்பிட்டியில் கைப்பற்றப்பட்டது
இலங்கை கடற்படையினரும் கற்பிட்டி பொலிஸாரும் இணைந்து, கற்பிட்டி புதுக்குடியிருப்பு பகுதியில் இன்று அதிகாலை (2026 நவம்பர் 28) முன்னெடுத்த விசேட கூட்டு சோதனை நடவடிக்கையின்போது, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட சுமார் 827 கிலோகிராம் பீடி இலைகளை ஏற்றிச் செல்லத் தயாராக இருந்த ஒரு கெப் வாகனமும் (01), சந்தேகநபர் ஒருவரும் (01) கைது செய்யப்பட்டுள்ளனர்.
