මූලාශ්රයක් යාවත්කාලීන විය
பால்நிலை சார் வன்முறைக்கு எதிராகக் குரல்கொடுக்க செம்மஞ்சளாய் ஒளிரும் கொழும்பு
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பால்நிலை சார் வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவரும் உலகளாவிய விழிப்புணர்வுப் பிரச்சாரத்திற்கு ஆதரவளிக்கும் வகையில், கொழும்பு நகரின் இரண்டு முக்கிய அடையாளச் சின்னங்கள் நவம்பர் 25 முதல் 27 வரை அடையாளபூர்வமாக செம்மஞ்சள் நிறத்தில் ஒளிர்ந்தது.
සාරාංශය
Women In Need (WIN) அமைப்பின் தலைமையில், நெதர்லாந்து இராச்சியத்தின் தூதரகம் மற்றும் கொழும்பு மாநகர சபை (CMC) ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படும் இந்த முன்னெடுப்பின் கீழ், கொழும்பு மாநகர சபை கட்டடம் மற்றும் தாமரைக் கோபுரம் (நெலும் குலுன) ஆகியன தொடர்ச்சியாக மூன்று மாலைப் பொழுதுகளும், மாலை 6.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை செம்மஞ்சள் நிறத்தில் ஒளியூட்டப்பட்டன.
