මූලාශ්රයක් යාවත්කාලීන විය
4ஆவது T20 போட்டியிலும் இலங்கை இளையோர் மகளிர் அணிக்கு வெற்றி
சுற்றுலா அவுஸ்திரேலிய இளையோர் மகளிர் அணிக்கு எதிராக ரங்கிரி தம்புள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (26) நடைபெற்ற நான்காவது T20 போட்டியில் டக்வர்த் லூயிஸ் முறைப்படி 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இளையோர் இலங்கை மகளிர் அணி அபார வெற்றி பெற்றது.
සාරාංශය
ஏற்கனவே நடைபெற்ற 3 போட்டிகளிலும் வெற்றியீட்டி தொடரைக் கைப்பற்றிய இளையோர் இலங்கை மகளிர் அணி இந்த வெற்றியுடன் 5 போட்டிகள் கொண்ட T20 தொடரில் 4 - 0 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் கைப்பற்றி முன்னிலை பெற்றது.3ஆவது போட்டியைப் போல இப்போட்டியும் சீரற்ற காலநிலையால் தாமதித்து ஆரம்பிக்கப்பட்டதுடன், ஒவ்வொரு இன்னிங்ஸும் 9 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
