මූලාශ්රයක් යාවත්කාලීන විය
சீனாவில் தேர்வறையின் கண்ணாடி கூரை மீது நடந்து மாணவர்களைக் கண்காணிப்பதாகப் பரவும் காணொளி உண்மையா?
எனவே எமது ஆய்வின் அடிப்படையில், சீனாவில் தேர்வறையின் கண்ணாடிக் கூரை மீது நடந்து மாணவர்களைக் கண்காணிப்பதாகப் பரவும் இந்தக் காணொளி உண்மையான சம்பவம் அல்ல என்றும், இது செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட காணொளி என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
සාරාංශය
தேர்வு எழுதும் மாணவர்கள் பார்த்து எழுதுவதைத் தடுக்க, சீனாவில் தேர்வறையின் கூரையைக் கண்ணாடியால் அமைத்து, அதன் மேல் நடந்தபடி கண்காணிப்பாளர்கள் மாணவர்களை அவதானிப்பதாக ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது. தேர்வு அறையின் கூரையில் கண்ணாடித் தளம் அமைத்த சீனா!" என்ற தலைப்புடன் இந்த காணொளி 2026.11.27 ஆம் திகதி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.
