මූලාශ්රයක් යාවත්කාලීන විය
வேனை கடத்திச் சென்ற கும்பல் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு
வேன் ஒன்றைக் கடத்திச் சென்ற கும்பலொன்றின் மீது எஹலியகொடை, பரகடுவ அங்குருவங்குவ பிரதேசத்தில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
සාරාංශය
எவ்வாறாயினும், குறித்த சந்தர்ப்பத்தில் சந்தேகநபர் ஒருவர் தப்பிச் சென்றுள்ளதுடன், மற்றுமொரு சந்தேகநபர் பொலிஸார் மீது தாக்குதல் நடத்தித் தப்பிச் செல்ல முயற்சித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது சந்தேகநபரைக் கட்டுப்படுத்துவதற்காகப் பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாகவும், அதில் அவர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
