මූලාශ්රයක් යාවත්කාලීන විය
போலி முகநூல் கணக்குகள் தொடர்பில் விசாரணை : ஆனந்த விஜேபால எச்சரிக்கை
தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் இருந்தவாறு போலியான முகப்புத்தக கணக்குகளை தயாரித்து சமூக வலைத்தளங்களில் இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் செயற்பாடுகள் அவதானிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
සාරාංශය
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், முஸ்லிம் சமூகத்தினரை மாத்திரம் இலக்காக் கொண்டு சமூக வலைத்தளங்களில் வெறுப்பு பேச்சுக்கள் மற்றும் முரண்பாடுகளை ஏற்படுத்தும் கருத்துக்கள் பதிவேற்றம் செய்யப்படுவதாக எவ்வித முறைப்பாடுகளும் மற்றும் தகவல்களும் கிடைக்கவில்லை. இனநல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் செயற்பாடுகள் மற்றும் வெறுப்பு பேச்சுக்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
