මූලාශ්රයක් යාවත්කාලීන විය
ரோஹித்திற்குப் பதிலாக இந்திய ஒருநாள் அணியின் தலைவராக சுப்மான் கில்
இந்திய ஒருநாள் அணியின் புதிய தலைவராக சுப்மான் கில் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்திய டெஸ்ட் மற்றும் T20I அணிகளை வழிநடாத்திய சுப்மான் கில் இதன் மூலம் முதல் தடவையாக அவுஸ்திரேலிய அணியுடனான தொடரில், இந்திய ஒருநாள் அணியினையும் வழிநடாத்தும் வாய்ப்பினைப் பெற்றுள்ளார்.
සාරාංශය
அதேநேரம் புதிய அணித்தலைவர் அறிவிப்போடு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமானது (BCCI) அவுஸ்திரேலிய ஒருநாள் மற்றும் T20i தொடர்களில் பங்கெடுக்கும் இந்திய வீரர்கள் குழாத்தினையும் வெளியிட்டுள்ளது. அவுஸ்திரேலிய - இந்திய அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஒக்டோபர் 19 தொடக்கம் 25 வரையும், ஐந்து போட்டிகள் T20I தொடர் ஒக்டோபர் 29 தொடக்கம் நவம்பர் 8 வரையும் இடம்பெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
