මූලාශ්රයක් යාවත්කාලීන විය
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் நவீன இருதய சிகிச்சை வளாகக் கட்டுமானம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!
நாட்டின் அனைத்துப் பிரஜைகளுக்கும் ஆரோக்கியமான வாழ்வை உறுதிப்படுத்துவதற்காக 3 பிரதான துறைகளின் கீழ் நாட்டின் சுகாதாரத் துறை பலப்படுத்தப்பட்டு வருவதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
සාරාංශය
இலவச சுகாதார சேவையை மக்களுக்கு மேலும் நெருக்கமாக்குதல், உலகின் அதிநவீன உபகரணங்கள் மற்றும் மருத்துவ முறைகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் முறைசாரா மேலாண்மைக்கு பதிலாக முறைசார்ந்த மேலாண்மை அமைப்பை நிறுவுதல் என்பன அந்தப் பிரதான துறைகளாகும் எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நீண்ட காலத்திற்குப் பின்னர் நாட்டின் சுகாதார சேவையை வலுவாக கொண்டு செல்வதற்குத் தேவையான மனித வளமும் மேம்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.