මූලාශ්රයක් යාවත්කාලීන විය
மின் கட்டண திருத்தம் குறித்த இறுதி தீர்மானம் அடுத்த வாரம்
நடப்பு ஆண்டின் இறுதி காலாண்டிற்கான முன்மொழியப்பட்ட மின் கட்டண திருத்தம் தொடர்பான இறுதி தீர்மானம் அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
සාරාංශය
முன்மொழியப்பட்ட மின் கட்டண திருத்தம் குறித்த வாய்மொழி மூலமான பொதுமக்கள் கருத்துகளைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்றைய தினம் (05) இடம்பெறவுள்ளதாக அதன் தகவல் தொடர்பாடல் பணிப்பாளர் ஜயநாத் ஹேரத் தெரிவித்தார். இவ்வாண்டின் இறுதி காலாண்டிற்காக 2.88% ஆல் மின் கட்டணத்தை அதிகரிக்குமாறு தேசிய மின்கட்டமைப்பு செயற்பாட்டு நிறுவனத்தினால் (National System Operator) பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
