මූලාශ්රයක් යාවත්කාලීන විය
41 சிறுவர்களின் எலும்புக்கூடுகள்: ராஜ் சோமதேவவின் செம்மணி அறிக்கை..! நாடாளுமன்றில் அமைச்சரின் அறிவிப்பு
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு தொடர்பில் பேராசிரியர் ராஜ் சோமதேவ சமர்ப்பித்துள்ள அறிக்கையை இறுதியான அறிக்கையாகக் கருத முடியாது என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
සාරාංශය
பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையில் முன்னெடுக்கப்படும் இந்த அகழ்வுப் பணிகள், யாழ்ப்பாணம் நீதவான், பல்வேறு தரப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணிகள், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் நீதித்துறை வைத்திய அதிகாரி கலாநிதி பிரணவன் செல்லையா, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் தடயவியல் அதிகாரிகள் ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
