මූලාශ්රයක් යාවත්කාලීන විය
சிறு மீன்பிடித்தொழில் நடவடிக்கைகளுக்கான தேசிய செயற்றிட்டத்தை (NPOA-SSF) தயாரிப்பதற்கான தேசிய செயலமர்வு
ஆழ்கடலின் நீல அலைகள் மத்தியில் வியர்வை சிந்தி உழைக்கும் இலங்கையின் சிறு மீன்பிடித் தொழில் சமூகத்தின் வாழ்வாதாரம் மற்றும் எதிர்காலப் பாதுகாப்பு கருதி ஒரு தீர்க்கமான அடியை முன்னோக்கி வைக்கும் வகையில், சிறு மீன்பிடித் தொழில் நடவடிக்கைகளுக்கான தேசிய செயற்றிட்டத்தை (NPOA-SSF) மேம்படுத்துவதற்கான தேசிய செயலமர்வு கடந்த 27 மற்றும் 28 ஆகிய இரு தினங்கள் நீர்கொழும்பில் வெற்றிகரமாக நடைபெற்றது.
සාරාංශය
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சு மற்றும் கடற்றொழில், நீரியல் வளங்கள் திணைக்களம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த விசேட பயிலரங்கிற்கு வங்காள விரிகுடா பிராந்திய அரசுகளுக்கிடையேயான அமைப்பின் (BOBP-IGO) அனுசரணை கிடைத்திருந்ததோடு, ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) முழுமையான தொழில்நுட்ப வழிகாட்டலும் வழங்கப்பட்டிருந்தது.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
