මූලාශ්රයක් යාවත්කාලීන විය
வௌ்ள அபாயம் எச்சரிக்கை
நாட்டில் நிலவும் பலத்த மழையுடனான வானிலையினால் ஆறுகளை அண்மித்த தாழ்நில பகுதிகளில் வௌ்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் நீர்ப்பாசன திணைக்களத்தினால் எச்சரிக்கை அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, நகலகம், ஹங்வெல்ல, க்ளென்கோஸ், கித்துல்கல, ஹெலாம்புவ, தெரணியகல, ஆகிய பகுதிகளில் களனி கங்கையின் நீர்மட்டம் எச்சரிக்கை மட்டத்தை எட்டியுள்ளது. புட்டுபவுல பகுதியில் களு கங்கையின் நீர்மட்டமும், மாகுர பகுதியில் மாகுர கங்கையின் நீர்மட்டமும் எச்சரிக்கை மட்டத்தை எட்டியுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. இரத்தினப்புரி பகுதியில் களு கங்கையும், மில்லகந்த பகுதியில் குடா கங்கையும் சிறு வௌ்ள மட்டத்தை எட்டியுள்ளன. பத்தேகம, தவலம பகுதிகளில் கிங் கங்கை எச்சரிக்கை மட்டத்தை எட்டியுள்ளதுடன், பாணதுகம பகுதியில் நில்வளா கங்கை சிறு வௌ்ள மட்டத்தை எட்டியுள்ளது. அத்துடன், மொரகஸ்வெவ பகுதியில் தெதுரு ஓயாவும், படல்கம பகுதியில் மஹா ஓயாவும் எச்சரிக்கை மட்டத்தை எட்டியுள்ளன. இந்நிலையில், குறித்த பகுதிகளில் கங்கைகளின் இரு மருங்கிலும் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமென நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
ප්රධාන වාර්තාව
සාරාංශය
நாட்டில் நிலவும் பலத்த மழையுடனான வானிலையினால் ஆறுகளை அண்மித்த தாழ்நில பகுதிகளில் வௌ்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கமைய, நகலகம், ஹங்வெல்ல, க்ளென்கோஸ், கித்துல்கல, ஹெலாம்புவ, தெரணியகல, ஆகிய பகுதிகளில் களனி கங்கையின் நீர்மட்டம் எச்சரிக்கை மட்டத்தை எட்டியுள்ளது. பத்தேகம, தவலம பகுதிகளில் கிங் கங்கை எச்சரிக்கை மட்டத்தை எட்டியுள்ளதுடன், பாணதுகம பகுதியில் நில்வளா கங்கை சிறு வௌ்ள மட்டத்தை எட்டியுள்ளது.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
-561323.jpg&w=640&q=75)