அறிவிப்பு: LakFeed தமிழ்ப் பதிப்பு 2026 டிசம்பர் 31 முதல் நிறுத்தப்படும்.

எங்களிடம் தமிழ் படிக்கத் தெரிந்தவர்கள் யாரும் இல்லை; தமிழ் ஆசிரியர் ஒருவரை நியமிக்கப் போதிய நிதியும் தற்போது இல்லை.

மேலும் படிக்க / Read in English

LakFeed ஒரு சிறிய சுயாதீனத் திட்டம். இங்கு வெளியாகும் உள்ளடக்கத்தின் தரத்தைச் சரிபார்க்க யாரும் இல்லாமல் இந்தப் பதிப்பைத் தொடர்ந்து நடத்துவது சரியல்ல என்று கருதுகிறோம். அந்தத் தேதிக்குப் பிறகு தமிழ்ப் பக்கங்கள் கிடைக்காது. செய்திகள், நாணய மாற்று விகிதங்கள், தங்க விலை உள்ளிட்ட சேவைகள் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் தொடர்ந்து கிடைக்கும். ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும். இதுவரை எங்களுடன் இருந்தமைக்கு நன்றி.

LakFeed's Tamil edition closes on 31 December 2026. LakFeed is a small independent project. Nobody here reads Tamil, and we cannot currently afford to hire a Tamil editor. With no one able to check what appears here, we do not think it is right to keep this edition running. After that date the Tamil pages will no longer be available. News, exchange rates, gold prices and the rest of the site stay available in English and Sinhala. We are sorry for the inconvenience, and thank you for reading.

Englishසිංහල

உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

தீம்

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்
மாற்று விகிதங்கள்ஒவ்வொரு வங்கியின் கொள்முதல், விற்பனை விகிதங்கள்
  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்
தங்க விலைகொழும்பு தங்க விலை, தினமும்
  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
பங்குகள்ஆங்கிலம்கொழும்பு பங்குகள், 15 நிமிடம் தாமதமாக
  • இன்றைய சந்தை
  • நிறுவனங்கள்
  • துறைகள்
  • நிறுவனச் செய்திகள்
எரிபொருள்பம்ப் விலைகளும் 1990 முதல் ஒவ்வொரு திருத்தமும்
  • எரிபொருள் விலைகள்
  • பயணச் செலவு கணிப்பான்
சலுகைகருவிகள்
ஆராயுங்கள்
விக்கிசெய்திகளில் வரும் நபர்கள், நிறுவனங்கள், இடங்கள், நிகழ்வுகள்
  • அனைத்துப் பக்கங்கள்
  • நபர்கள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

  • முதல் பக்கம்
  • பிரபலமானவை
  • சமீபத்திய
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • வானிலை
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • கல்வி
  • குற்றம் மற்றும் நீதிமன்றம்
  • சுகாதாரம்
ஆதாரங்கள்ஆதாரங்கள்

செய்தி ஆதாரங்கள் (14)

Asian MirrorCitizen NewsFact Crescendo தமிழ்Global Tamil NewsHiru News - TamilIBC TamilLanka News Web தமிழ்Lanka TruthNews First - தமிழ்News.lkTamil MirrorThePapare TamilThinakaranஅத தெரண
LakFeed

இலங்கை, எளிமையாக.

இலங்கையர்கள் தினமும் பார்க்கும் அனைத்தும், ஒரே இடத்தில், உங்கள் மொழியில்.

  • செய்திகள்
  • மாற்று விகிதங்கள்
  • தங்க விலை
  • எரிபொருள் விலைகள்
  • பங்குகள்
  • அட்டைச் சலுகைகள்
  • கருவிகள்
  • விக்கி
  • தள வரைபடம்
  • FAQ
  • About us
  • Contact
  • Advertise
  • Blog
  • Privacy Policy
  • Terms of Service
  • DMCA

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

  1. செய்திகள்
  2. /
  3. அரசியல்

1 ஊடகம்·30 நிமி. முன் புதுப்பிக்கப்பட்டது

அசாதாரண இயற்கைச் சூழல் நிலைமைகளுக்கும் முகங்கொடுக்கவும், அனர்த்தங்களைக் குறைத்துக்கொள்ளவும் முன்னாயத்தச் செயற்பாடுகள் அவசியம் - பிரதமர்

காலநிலை மாற்றத்தின் மத்தியில் ஏற்படும் திடீர் அனர்த்தங்களுக்கும் அசாதாரண இயற்கைச் சூழல் நிலைமைகளுக்கும் முகங்கொடுக்கவும், அனர்த்தங்களைக் குறைத்துக்கொள்ளவும் முன்னாயத்தச் செயற்பாடுகள் அவசியம் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய காலநிலை மாற்றத்தின் மத்தியில் ஏற்படும் திடீர் அனர்த்தங்களுக்கும் அசாதாரண இயற்கை நிலைமைகளுக்கும் முகங்கொடுப்பதற்கும், அதனால் ஏற்படக்கூடிய இழப்புகளைக் குறைத்துக்கொள்வதற்கும் தயாராக இருக்க வேண்டும் எனவும், அனர்த்த முகாமைத்துவம் ஒரு துறைக்குள் மட்டுப்படுத்தப்படாமல் பல்வேறு துறைகளின் ஊடாக ஒருங்கிணைந்த தலையீடு மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். நவம்பர் 10ஆம் திகதி நாரஹேன்பிட்டியில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். பிரதமரின் பங்குபற்றுதலுடன், ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் நிபுணாராச்சியின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கடந்த நவம்பர் 06ஆம் திகதி பெய்த கடும் மழையினால் கொழும்பு மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் அனர்த்த நிலைமை குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது. இதன்போது, தற்போது நிலவும் காலநிலை மாற்றங்களின் மத்தியில் இவ்வாறான திடீர் அனர்த்தங்களுக்கும் அசாதாரண இயற்கை நிலைமைகளுக்கும் முகங்கொடுப்பதற்கும், அதனால் ஏற்படக்கூடிய இழப்புகளைக் குறைத்துக்கொள்வதற்கும் தயாராக இருக்க வேண்டும் எனச் சுட்டிக்காட்டிய பிரதமர், அனர்த்த முகாமைத்துவம் ஒரு துறைக்குள் மட்டுப்படுத்தப்படாமல் பல்வேறு துறைகளின் ஊடாக ஒருங்கிணைந்த முறையில் செயற்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். மேலும், கொழும்பு மாவட்டமும் கொழும்பு நகரமும் தனித்துவமான புவியியல் மற்றும் நகர்ப்புறத் தன்மைகளைக் கொண்ட பிர​தேசமாகும் எனவும், தற்போது எதிர்கொள்ள நேர்ந்துள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் நீர் தேங்கும் நிலைமைகள் நீண்ட காலமாக உரிய தீர்வுகள் காணப்படாத பல பிரச்சினைகளின் விளைவாகும் எனவும் சுட்டிக்காட்டிய பிரதமர், கழிவகற்றல் முகாமைத்துவம் முதல் நீர்வழிகளை உரிய முறையில் பேணுதல், தாழ்வுநிலங்களைப் பாதுகாத்தல் வரையிலான விரிவான வேலைத்திட்டத்தின் கீழ் இச்சிரமங்களுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார். இக்கூட்டத்தில், கொழும்பு மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கையும் மழைநீரையும் கட்டுப்படுத்துவதற்காக ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள பிரதான திட்டங்கள் பற்றிய விபரங்களைக் கொழும்பு மாவட்டச் செயலாளர் கினிகே பிரசன்ன ஜனக குமார சமர்ப்பித்தார். அதற்கமைய, களனி கங்கைத் தாழ்வுநிலப் பிரதேச வெள்ளப்பெருக்குக் கட்டுப்பாட்டுத் திட்டத்திற்கு இணையாக, கொலன்னாவ பிரதேசத்தில் வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்துவதற்காக 15,000 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டம், கடுவெல பிரதேசத்தின் அனைத்து நீர்வழிகளையும் துப்புரவு செய்து அபிவிருத்தி செய்வதற்காக 450 மில்லியன் ரூபா செலவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டம், கொலன்னாவையின் பிரதான 4 வாவிகளைத் துப்புரவு செய்து அபிவிருத்தி செய்வதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டம், நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் களனி கங்கைக் கரைகளை அபிவிருத்தி செய்வதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டம். ஆகியன உள்ளிட்ட, மாவட்டச் செயலாளரினால் விபரங்கள் சமர்ப்பிக்கப்பட்ட திட்டங்கள் தொடர்பில் பிரதமர் விசேட கவனம் செலுத்தினார். இத்திட்டங்களுக்கு மேலதிகமாக, எதிர்காலத்தில் மீண்டும் இவ்வாறான அனர்த்த நிலைமைகள் ஏற்படுவதற்கான அபாயத்தைக் குறைத்துக்கொள்வதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டிய செயற்பாடுகள் குறித்தும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. பல வருடங்களாக உரிய தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படாமையால் தீவிரமடைந்துள்ள பிரச்சினைகளுக்கு மேலும் தாமதிக்காமல் அவசியமான சரியான தீர்மானங்களை மேற்கொண்டு செயற்பட வேண்டும் எனவும் பிரதமர் வலியுறுத்தினார். அத்துடன், வாய்க்கால்களையும் நீர்வழிகளையும் துப்புரவு செய்வது அனர்த்த நிலைமை ஏற்படும்போது மாத்திரம் மேற்கொள்ளப்படும் செயற்பாடு அல்ல எனவும், அது தொடர்ச்சியாகவும் இடைவிடாத பராமரிப்புடனும் பேணப்பட வேண்டிய செயற்பாடாகும் என்பதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார். இதற்கு மேலதிகமாக, கொழும்பு மாவட்டத்தினுள் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் இதுவரையான முன்னேற்றம், மாவட்டத்தினுள் இடம்பெறும் கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் பிரஜா சக்தி வேலைத்திட்டம் தொடர்பிலும் பிரதமரின் விசேட கவனம் ஈர்க்கப்பட்டது. இந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், இலங்கைப் பாராளுமன்றப் பிரதிச் சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி, மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப், பாதுகாப்புப் பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர, நகரத் திட்டமிடல் மற்றும் வீடமைப்புப் பிரதி அமைச்சர் எரங்க குணசேகர உள்ளிட்ட கொழும்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், மேல்மாகாணப் பிரதம செயலாளர் பிரதீப் புஷ்பகுமார உள்ளிட்ட கொழும்பு மாவட்ட அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

இச்செய்தியைப் பகிரவும்

முழு செய்தித் தொகுப்பு

  • News.lk·30 நிமி. முன்அசாதாரண இயற்கைச் சூழல் நிலைமைகளுக்கும் முகங்கொடுக்கவும், அனர்த்தங்களைக் குறைத்துக்கொள்ளவும் முன்னாயத்தச் செயற்பாடுகள் அவசியம் - பிரதமர்
  • News.lk·30 நிமி. முன்காலநிலை மாற்றத்தின் மத்தியில் ஏற்படும் திடீர் அனர்த்தங்களுக்கும் அசாதாரண இயற்கைச் சூழல் நிலைமைகளுக்கும் முகங்கொடுக்கவும், அனர்த்தங்களைக் குறைத்துக்கொள்ளவும் முன்னாயத்தச் செயற்பாடுகள் அவசியம்

சுருக்கம்

இதன்போது, தற்போது நிலவும் காலநிலை மாற்றங்களின் மத்தியில் இவ்வாறான திடீர் அனர்த்தங்களுக்கும் அசாதாரண இயற்கை நிலைமைகளுக்கும் முகங்கொடுப்பதற்கும், அதனால் ஏற்படக்கூடிய இழப்புகளைக் குறைத்துக்கொள்வதற்கும் தயாராக இருக்க வேண்டும் எனச் சுட்டிக்காட்டிய பிரதமர், அனர்த்த முகாமைத்துவம் ஒரு துறைக்குள் மட்டுப்படுத்தப்படாமல் பல்வேறு துறைகளின் ஊடாக ஒருங்கிணைந்த முறையில் செயற்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

News.lk இலிருந்து சுருக்கப்பட்டது

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நபர்கள்
  • லக்ஷ்மன் நிபுணாராச்சியின்·
  • கினிகே பிரசன்ன ஜனக குமார·
  • Harini Amarasuriya·
  • ஜெனரல் அருண ஜயசேகர·
  • பிரதீப் புஷ்பகுமார·
  • எரங்க குணசேகர·
  • ஹனீப் யூசுப்·
  • ரிஸ்வி சாலி
நிறுவனங்கள்
  • நீர்ப்பாசனத் திணைக்களத்தினால்·
  • கழிவகற்றல் முகாமைத்துவம்·
  • மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்
இடங்கள்
  • களனி கங்கைத் தாழ்வுநிலப் பிரதேச·
  • கொலன்னாவ பிரதேசத்தில்·
  • கொழும்பு மாவட்டத்தில்·
  • கடுவெல பிரதேசத்தின்·
  • களனி கங்கைக் கரைகளை·
  • நாரஹேன்பிட்டியில்·
  • கொழும்பு நகரமும்·
  • கொலன்னாவையின்

ஒரு பார்வையில்

செய்தி நிறுவனங்கள்
1
கட்டுரைகள்
2
முதல் அறிக்கை
10 நவ., 6:04 PM

அரசியல் இல் மேலும்

அரசியல்
  • கடுவெல மேயரின் சர்ச்சை பேச்சு: கட்சி மட்டத்தில் ஒழுக்காற்று நடவடிக்கைHiru News - Tamil·1 மணி முன்
  • 1990 சுவசெரிய அம்புலன்ஸ் சேவைக்காக, முழுமையான மருத்துவ வசதிகளைக் கொண்ட 100 புதிய அம்புலன்ஸ் வண்டிகளைக் கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி3 ஊடகங்கள்·2 மணி முன்
  • SJBயின் அரசியல் கொள்கை மத்திய பாதைLanka News Web தமிழ்·2 மணி முன்
  • 39 ட்ரோன்கள், 16 மைக்ரோஃபோன்கள் - நளின் பண்டார விளக்கம்!Lanka News Web தமிழ்·2 மணி முன்
  • 2026.11.09 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்News.lk·3 மணி முன்

பிரபலமான செய்திகள்

பிரபலமானவை
  1. 1A9 வீதி விபத்துக்கு SLTB பேருந்தின் சாரதியே காரணம்: காவல்துறை அறிக்கை9 ஊடகங்கள்
  2. 2சரசவி உயன - பேராதனைக்கும் இடையில் புகையிரதப் பாலத்தை நிர்மாணிக்க அனுமதி4 ஊடகங்கள்
  3. 3முதல் டெஸ்ட் போட்டியில் தொடர்ந்தும் ஆதிக்கம் செலுத்தும் பாகிஸ்தான்9 ஊடகங்கள்
  4. 4அரசாங்கத்துக்கு 148 இலட்சம் ரூபாய் நட்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டு – நிஷாந்த ரணதுங்க பிணையில் விடுதலை! 5 ஊடகங்கள்
  5. 5100 புதிய நோயாளர் காவுவண்டிகளுக்காக இந்திய அரசுடன் உடன்படிக்கை3 ஊடகங்கள்

தலைப்பு வாரியாக உலாவுக

  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • வானிலை
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • கல்வி
  • குற்றம் மற்றும் நீதிமன்றம்
  • சுகாதாரம்