1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
39 ட்ரோன்கள், 16 மைக்ரோஃபோன்கள் - நளின் பண்டார விளக்கம்!
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட 39 ட்ரோன் விமானங்கள் மற்றும் 16 மைக்ரோஃபோன்கள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார விளக்கமளித்துள்ளார்.
சுருக்கம்
குறித்த உபகரணங்கள் சிங்கப்பூரிலிருந்து குடும்பத்திற்குச் சொந்தமான வணிகத்திற்காகக் கொண்டுவரப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்: தனது மகன் மற்றும் மனைவி பணிப்பாளர் பதவி வகிக்கும் குடும்ப வணிகம் ஒன்று காணப்படுவதாகவும், அந்த நிறுவனம் கமராக்கள் மற்றும் ட்ரோன்களை வாடகைக்கு வழங்குதல் மற்றும் விற்பனை செய்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
