உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

News.lk

News.lk•இப்போது
அடுத்த ஆண்டின் ஜூன்–ஜூலை மாதங்களுக்கு முன்னரே விசேட டெங்கு ஒழிப்புத் திட்டங்களை ஆரம்பியுங்கள் — பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

கழிவுநீர் மற்றும் திண்மக் கழிவுகளை அகற்றும் விடயத்தில் நிறுவன அல்லது பிரதேச எல்லைகளுக்குள் மட்டுப்படாது தொழிற்படுங்கள் அடுத்த ஆண்டின் ஜூன்-ஜூலை மாதங்களுக்கு முன்னரே விசேட டெங்கு ஒழிப்புத் திட்டங்களை ஆரம்பியுங்கள் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கடந்த ஆண்டுகளின் புள்ளிவிவரங்கள் மற்றும் வரைபடங்களைக் கவனிக்கும்போது, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாகக் காணப்படுவதால், அதைக் குறைப்பதற்காக அடுத்த ஆண்டின் ஜூன் மாதத்திற்கு முன்னரே விசேட டெங்கு ஒழிப்புத் திட்டங்களை ஆரம்பிக்குமாறு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆலோசனை வழங்கினார். செப்டெம்பர் 15ஆம் திகதி, கொழும்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கொழும்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே பிரதமர் இதனைத் தெரிவித்தார். கொழும்பு மாவட்டத்திற்குள் கழிவுநீர் அகற்றல் மற்றும் திண்மக் கழிவுச் சேகரிப்பு தீவிரமான பிரச்சினையாக உருவெடுத்துள்ளதால், அதனை மிக விரைவில் தீர்க்க வேண்டும் எனவும், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது நிறுவன அல்லது பிரதேச எல்லைகளுக்குள் மட்டுப்படாமல் தொழிற்பட வேண்டும் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார். இது நாடு முழுவதும் எதிர்கொள்ளும் ஒரு நெருக்கடியான நிலைமை என்பதால், கொழும்பு மாவட்டத்தின் கழிவுநீர் மற்றும் திண்மக் கழிவு முகாமைத்துவத்தை ஒரு தேசியத் தேவையாகக் கருதித் தொழிற்படுமாறு அவர் அனைத்து அரச நிறுவனத் தலைவர்களுக்கும் ஆலோசனை வழங்கினார். அத்துடன், கழிவுநீர் மற்றும் திண்மக் கழிவுகளைச் சரியான முறையில் முகாமைத்துவம் செய்வது ஒரு தேசியத் தேவை என்பதை மக்களுக்கு விழிப்புணர்வூட்டுவதன் மூலம் அவர்களது சாதகமான பதில்களையும் முழுமையான ஒத்துழைப்பையும் பெற முடியும் என பிரதமர் மேலும் தெரிவித்தார். இதன்போது கருத்துத் தெரிவித்த கொழும்பு மாவட்ட முதன்மை சுகாதார மருத்துவ அதிகாரி, செப்டெம்பர் மாதத்தின் முதலாவது வாரத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 40 சதவீதம் வரை குறைந்துள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும், கொழும்பு மாவட்ட மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தீவிரமாகத் தலையிட்டு பெரும் ஒத்துழைப்பை வழங்கி வருவதாக விவசாயச் சேவைகள் திணைக்களத்தின் அதிகாரிகள் இதன்போது தெரிவித்தனர். அந்த ஒத்துழைப்பும் அர்ப்பணிப்பும் மக்களுக்கு மிக விரைவாகச் சேவைகளை வழங்குவதற்குப் பெரும் பக்கபலமாக அமைந்ததாக மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் தெரிவித்தார். இந்நிகழ்வில் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் நிபுணஆரச்சி, பாராளுமன்ற உறுப்பினர்களான சந்தன சூரியஆரச்சி, அருண பனாகொட, தேவானந்த சுரவீர, சுசந்த தொடாவத்த, சமன்மலி குணசிங்க உள்ளிட்ட உள்ளூராட்சி மன்ற மக்கள் பிரதிநிதிகள், கொழும்பு மாவட்ட செயலாளர் கினிகே பிரசன்ன ஜனக்க குமார உள்ளிட்ட அரச நிறுவனத் தலைவர்கள், அனைத்துப் பிரதேச செயலாளர்கள் மற்றும் ஒருங்கிணைப்புக் குழுப் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர். பிரதமர் ஊடகப் பிரிவு

1 min1m
News.lk•இப்போது
10,000க்கும் மேற்பட்ட அரச பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சட்டப்பூர்வ நிலுவைக் கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை

25 ஆண்டுகளுக்கும் மேலாக அரச பெருந்தோட்ட நிறுவனங்களின் ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் இருந்த சட்டப்பூர்வ நிலுவைத் தொகையை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தொழில் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 min1m
News.lk•இப்போது
தேசத்தின் இளைஞர் அபிவிருத்திக்கான புதிய தேசியக் கொள்கை 2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை

இளைஞர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை விஞ்ஞான ரீதியாகவும் நிலைபேறான முறையிலும் தீர்ப்பதற்கான வழிகாட்டல்கள் மற்றும் பரிந்துரைகளை வழங்கக்கூடிய கொள்கை சட்டகமொன்றைத் தயாரிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

2 min2m
News.lk•இப்போது
சர்வதேச நிலைமைகளைப் புரிந்து கொண்டு இலங்கையில் வறுமையை ஒழிப்பதற்காக 'பிரஜா சக்தி' திட்டம் உருவாக்கப்பட்டது"

சர்வதேச நிலைமைகளைப் புரிந்து கொண்டு இலங்கையில் வறுமையை ஒழிப்பதற்காக 'பிரஜா சக்தி' திட்டம் உருவாக்கப்பட்டது" - கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னில

1 min1m
News.lk•இப்போது•9 ஊடகங்கள்பிரபலமானவை
மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையின் திடீர் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (16) முற்பகல் ஆரம்பிக்கப்பட்டன.

மன்னார் மக்களின் சுகாதார வசதிகளை மேலும் விரிவுபடுத்துவதற்காக, இந்திய அரசின் நிதியுதவியுடன் 600 மில்லியன் ரூபாய் செலவில் அனைத்து நவீன வசதிகளையும் கொண்டதாக இந்தப் பிரிவு நிர்மாணிக்கப்பட உள்ளது. நிர்மாணப்ணியானது 2028 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் நிறைவு செய்யப்படவுள்ளது.

5 min5m
News.lk•17 நிமி. முன்•9 ஊடகங்கள்பிரபலமானவை
மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையின் திடீர் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவின் நிர்மாணப் பணிகளின் ஆரம்பம்..

மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையின் திடீர் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவின் நிர்மாணப் பணிகளின் ஆரம்ப நிகழ்வு இன்று (16) முற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் இடம்பெற்றது.

1 min1m
News.lk•2 மணி முன்
14-09-2026 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்

14-09-2026 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்

1 min1m
News.lk•2 மணி முன்
எம். எச். எம். அஷ்ரப் அவர்களின் 26ஆவது நினைவேந்தல் நிகழ்வும் கட்சியின் மாநாடும் இன்று காத்தான்குடியில்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகரும், மறைந்த முன்னாள் அமைச்சருமான எம். எச். எம். அஷ்ரப் அவர்களின் 26ஆவது நினைவேந்தல் நிகழ்வும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 34ஆவது பிரதிநிதிகள் மாநாடும் இன்று (16) மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளன.

1 min1m
News.lk•16 மணி முன்
ப்ளக்பூல் அம்பேவெல பட்டிபொல ஹோட்டன் சமவெளி (B512) (5 + 200 கிலோமீற்றர் தொடக்கம் 12 + 000 கிலோமீற்றர் வரை) வீதியை புனரமைத்தல்

2025 நவம்பர் மாத இறுதியில் இலங்கையில் ஏற்பட்ட தித்வா புயல் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட ப்ளக்பூல் அம்பேவெல பட்டிபொல ஹோட்டன் சமவெளி (B512) (5+ 200 கிலோமீற்றர் தொடக்கம் 12 + 000 கிலோமீற்றர் வரை) வீதியை புனரமைப்பதற்காக தேசிய போட்டி விலைமுறிக் கோரல் முறையைக் கடைப்பிடித்து விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளன. அதற்காக 04 விலைமனுக்கள் கிடைக்கப் பெற்றுள்ளது.

1 min1m
News.lk•23 மணி முன்
நெல் கொள்வனவிற்காக நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு மேலதிகமாக ரூ. 2,500 மில்லியன் நிதியை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி
1 min1m
News.lk•1 நாள் முன்
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ளூராட்சி வாரம் ஆரம்பம்

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் ஏற்பாட்டில், "பாதுகாப்பான வாழ்தகு சூழலை உருவாக்குவதன் மூலம் பொதுமக்களின் அன்றாடத் தேவைகளை நிறைவேற்றி, தொலைநோக்கான எதிர்காலத்தை உறுதிசெய்கின்ற புத்துயிர்க்கும் புதுநகரங்களைப் படைத்தல்" என்ற நோக்கில் நடைமுறைப்படுத்தப்படும் உள்ளூராட்சி வாரம் நேற்று (14.09.2026) ஆரம்பமாகியது.

1 min1m
News.lk•1 நாள் முன்•6 ஊடகங்கள்
இலங்கை – தாய்லாந்து தொழிலாளர் ஒத்துழைப்பு மேலும் வலுப்பெறுகிறது. முதற்கட்டமாக 10,000 இலங்கைத் தொழிலாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு தாய்லாந்து அனுமதி

தொழிலாளர் ஒத்துழைப்பு மற்றும் தாய்லாந்தில் இலங்கைத் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குதல் தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த இரு ஒப்பந்தங்கள் நேற்று பாங்கொக்கில் இலங்கை மற்றும் தாய்லாந்து நாடுகளுக்கிடையே கைச்சாத்திடப்பட்டன. இந்த ஒப்பந்தங்களின் மூலம் பாதுகாப்பான, முறையான மற்றும் இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் வகையில் தொழிலாளர் இயக்கத்தை மேம்படுத்துவதுடன், இலங்கைத் தொழிலாளர்களின் உரிமைகள், நலன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். முதற்கட்டமாக 10,000 இலங்கைத் தொழிலாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு தாய்லாந்து அனுமதி வழங்கியுள்ளது. எதிர்காலத்தில் திறன் வாய்ந்த தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்புகளை மேலும் விரிவுபடுத்துவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக இளைஞர்களுக்கான தகவல் தொழில்நுட்பம் (IT), சுற்றுலாத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையர்களுக்கான வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பல்வேறு துறைகளில் விரிவுபடுத்துவதற்கும், இலங்கை - தாய்லாந்து இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கும் இந்த ஒப்பந்தங்கள் முக்கியமான ஒரு புதிய மைல்கல்லாக அமைந்துள்ளன. ---

1 min1m
News.lk•1 நாள் முன்
ஏறாவூர் ரஹ்மானியா மகா வித்தியாலய மாணவர்கள் ஜனாதிபதி செயலகம் மற்றும் ஜனாதிபதி மாளிகையை பார்வையிட்டனர்

மட்டக்களப்பு ஏறாவூர் ரஹ்மானியா மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவர்கள் குழுவொன்று ஜனாதிபதி செயலகம் மற்றும் ஜனாதிபதி மாளிகையைப் பார்வையிடுவதற்காக நேற்று (14) பிற்பகல் வருகை தந்தனர்.

1 min1m
News.lk•1 நாள் முன்
ஜனாதிபதி நிதிய சேவைகளை விஸ்தரிப்பதில் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்திய கிழக்கு மாகாண பிரதேச செயலகங்கள் பாராட்டு

பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ள மற்றும் துரிதமான சேவைகளை வழங்கும் நோக்கில், ஜனாதிபதி நிதிய சேவைகளை பிரதேச செயலக மட்டத்தில் விஸ்தரிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ், 2025 ஆம் ஆண்டில் உயரிய செயல்திறனை வெளிப்படுத்திய கிழக்கு மாகாணத்தின் பிரதேச செயலகங்களை பாராட்டும் "சேவை பாராட்டு'' வேலைத்திட்டம் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலாநந்தா அழகியற்கலை கற்கைகள் நிறுவனத்தில் அண்மையில் நடைபெற்றது.

1 min1m
News.lk•1 நாள் முன்•4 ஊடகங்கள்
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2026 செப்டம்பர் 15ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மழை நிலைமை: நீர்கொழும்பிலிருந்து கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை மற்றும் பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

1 min1m
News.lk•1 நாள் முன்•4 ஊடகங்கள்
இன்றைய வானிலை முன்னறிவிப்பு

இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் உருவாகியுள்ள கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை தொடர்ந்தும் காணப்படுகின்றது. இத் தொகுதியின் தாக்கம் காரணமாக மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மேகமூட்டமான வானம் காணப்படுவதுடன் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப் படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். 2026 செப்டம்பர் 15ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2026 செப்டம்பர் 15ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது .

1 min1m
News.lk•1 நாள் முன்•9 ஊடகங்கள்பிரபலமானவை
அனுராதபுரம், திருகோணமலை, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மருத்துவமனைகளில் ரூ. 7148 மில்லியன் செலவில் கட்டப்படவுள்ள புதிய கட்டிடங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களின் தலைமையில்

அனுராதபுரம், திருகோணமலை, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மருத்துவமனைகளில் ரூ. 7148 மில்லியன் செலவில் கட்டப்படவுள்ள புதிய கட்டிடங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் 16ஆம் திகதி நடைபெற உள்ளது.

2 min2m
News.lk•2 நாள் முன்•2 ஊடகங்கள்
உள்நாட்டு விவசாய உற்பத்திகளைப் பயன்படுத்தி போஷாக்கு மற்றும் வருமானத்தை அதிகரிப்பதற்கான SARP வேலைத்திட்டம் 

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட போசாக்கான விவசாய உற்பத்திகளுக்காக பெறுமதி சேர்க்கப்பட்டு உள்ளூர் ஊட்டச்சத்தை அதிகரித்தல், உணவு வீண்விரயத்தைக் குறைத்தல் மற்றும் விவசாய குடும்பங்களின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் விஷேட தெளிவுபடுத்த நிகழ்வுகள் தற்போது தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன

2 min2m
News.lk•2 நாள் முன்
இராணுவத்தின் பொறியியலாளர் சேவை படைப்பிரிவின் பங்களிப்பில் தம்பேதென்ன அனர்த்த வீடமைப்புத் திட்டம் மீண்டும் ஆரம்பம் 

பூனாகலை, கபரகலை மற்றும் ஹாலிஎல மொரகொல்ல அனர்த்த வீடமைப்புத் திட்டத்திற்காக இராணுவ பொறியியலாளர் சேவைப் பிரிவின் அறிவு மற்றும் தொழில் பங்களிப்புடன் செயல்பட்டுள்ள விதத்தில் தம்பேதென்ன அனர்த்த வீடமைப்புத் திட்டத்திற்காக அப்படையின் பங்களிப்பைப் பெற்றுக் கொள்வதற்கு எதிர்பார்ப்பதாக பதுளை மாவட்ட செயலாளர் சுனில் கலகம தெரிவித்தார்.

1 min1m
News.lk•2 நாள் முன்•5 ஊடகங்கள்
இன்றைய வானிலை முன்னறிவிப்பு

இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் உருவாகியுள்ள கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக மேல், மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் மேகமூட்டமான வானம் காணப்படுவதுடன் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், மத்திய, சப்ரகமுவ, தென், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப் படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். 2026 செப்டம்பர் 14ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2026 செப்டம்பர் 14ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

1 min1m