அண்மையில் நாட்டைப் பாதிப்புக்குள்ளாக்கிய 'அர்னப்' சூறாவளி காரணமாக கடலில் தொடர்பாடல் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, காணாமல்போயிருந்த "IMUL-A-0022 TLE" என்ற பதிவு இலக்கத்தைக் கொண்ட மீன்பிடிப் படகும் அதில் பயணித்த நான்கு மீனவர்களும் இன்று பொத்துவில் கரையில் இருந்து சுமார் 200 கடல் மைல் தொலைவில் இருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
நாட்டைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளுக்கான அடுத்த 24 மணி நேர வானிலை முன்னறிவிப்பு
01 நவம்பர் 2026 அன்று காலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுநிலை, 31 அக்டோபர் 2026 அன்று இரவு 11.30 மணிக்கு 10.9°வடக்கு மற்றும் 87.5°கிழக்கு அட்சரேகை மற்றும் தீர்க்கரேகைக்கு அருகில் மையம் கொண்டிருந்தது. இந்த அமைப்பு மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, 01 நவம்பர் அன்று காலை 11.30 மணிக்குள் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்காள விரிகுடாப் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுநிலையாக உருவாக அதிக வாய்ப்புள்ளது. மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அன்றிரவு 11.30 மணிக்குள் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மேற்கு-மத்திய வங்காள விரிகுடாப் பகுதிகளில் புயலாக வலுப்பெறவும், நவம்பர் 2 ஆம் தேதிக்குள் மேற்கு-மத்திய வங்காள விரிகுடாப் பகுதிகளில் கடுமையான புயலாக மேலும் வலுப்பெறவும் அதிக வாய்ப்புள்ளது.
01 நவம்பர் 2026-க்கான வானிலை முன்னறிவிப்பு
01 நவம்பர் 2026 அன்று காலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
பிற்பகல் 1.00 மணிக்கு மேல் மேற்கு, சபரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தெற்கு மாகாணங்களிலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். சில இடங்களில் 50 மி.மீ.-க்கு மேல் மிதமான முதல் கனமழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் மழையற்ற வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இடியுடன் கூடிய மழையுடன் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் அபாயங்களைக் குறைப்பதற்கு, பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அதிகாலை நேரங்களில் மேற்கு, சபரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், குருநாகல் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலும் சில இடங்களில் மூடுபனி நிலவக்கூடும்.
அன்டிகுவா மற்றும் பர்புடாவின் செயிண்ட் ஜோன்ஸ் நகரில் நடைபெறவுள்ள 2026ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் (CHOGM) பங்கேற்பதற்காக, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஒக்டோபர் 31 பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றார்.
"தூய்மையான இலங்கை" (Clean Sri Lanka) தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் "அத்தம" தேசிய தூய்மைப்படுத்தல் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பான மூன்றாவது மாவட்ட வேலைத்திட்டம் இன்றைய தினம் (31.10.2026) யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைப் பிரிவில் தொழுநோயாளர்களுக்கான தொடர் சிகிச்சை நிலையம் நேற்று (30.10.2026) உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
பிரஜா சக்தி வறுமை ஒழிப்புக்கான தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், வவுனியா மாவட்டத்தின் ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவிலும் சுமார் 52 இலட்சம் ரூபாய் பெறுமதியான அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னில தெரிவித்தார்.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, ஒக்டோபர் 30ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற 'இலங்கை அக்ரிகனெக்ட் கூட்டு நடைமுறைப்படுத்தல் திட்டத்தின்' (Sri Lanka AgriConnect Joint Implementation Plan) அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டார். டிஜிட்டல் மயமாக்கலின் ஊடாக இலங்கையின் விவசாயத் துறையை நவீனமயப்படுத்துவதையும் தேசியப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதையும் இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
பேரிடரின்போது பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதுடன், மீண்டும் அவ்வாறான பேரிடர்கள் ஏற்படாதவாறு தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ அவர்களுக்கும், சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனத்தின் (International Finance Corporation - IFC) பிராந்திய உப தலைவர் சர்வேஷ் சூரி (Sarvesh Suri) உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று (30) நிதி அமைச்சில் நடைபெற்றது.
36ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் ஆரம்ப நிகழ்வு நேற்று (30ஆம் திகதி) பிற்பகல் 3.00 மணிக்கு தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் ஆரம்பமானது. தேசிய இளைஞர் விளையாட்டு விழா ஒக்டோபர் 30ஆம் திகதி முதல் நவம்பர் 01ஆம் திகதி வரை நடைபெறுகிறது.
முத்துராஜவெல, நீர்கொழும்பு களப்பு மற்றும் கம்பஹா மாவட்டம் சார்ந்த சுற்றாடல் பிரச்சினைகளைக் கண்டறிதல் தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் தலைமையில் இன்று (30) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டுறவுச் சங்கங்கள் எதிர்நோக்கும் நடைமுறைப் பிரச்சினைகள் மற்றும் அவற்றின் அபிவிருத்திக்கான தேவைப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து, தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில், வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் கௌரவ வசந்த சமரசிங்க அவர்களின் தலைமையில் விசேட கலந்துரையாடல் இன்று (30.10.2026) யாழ்ப்பாண மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
வடமேல் கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் மாலன் பெரேரா, இன்று (2026 ஒக்டோபர் 30) வடமேல் கடற்படை கட்டளைத் தலைமையகத்தில், குறித்த கட்டளையின் தளபதியாக தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை மற்றும் நிறை, அளவைகள் உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடல் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் கௌரவ வசந்த சமரசிங்க அவர்களின் தலைமையில் இன்று(30.10.2026) யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
முல்லைத்தீவு கடற்பரப்பில் காணாமற்போன மூன்று கடற்றொழிலாளர்களை மீட்பதற்காக அண்டை நாடுகளின் ஒத்துழைப்புடன் சர்வதேச தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் திரு. அ. உமாமகேஸ்வரன் அவர்கள் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சிடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.
அநுராதபுரம் புனித பூமியில் அபிவிருத்தித் திட்டங்களைச் செயற்படுத்தும்போது ஒருங்கிணைந்த பாரம்பரிய பாதுகாப்பு, முகாமைத்துவம், திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி தொடர்பில் தேவையான தீர்மானங்களை மேற்கொள்ளும் செயன்முறைக்காக ஜனாதிபதி ஆலோசகர் சபை ஒன்று நிறுவப்பட்டுள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராகவும் உறுப்பினராகவும் ஓய்வுபெற்ற நீதியரசர் வி. கே. மலல்கொட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.