உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

News First - தமிழ்

News First - தமிழ்•2 நாள் முன்
மீண்டும் சாதனை படைத்த ருமேஷ் தரங்க

2026ஆம் ஆண்டிற்கான WORLD ULTIMATE மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப் தொடரின் ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கையின் ருமேஸ் தரங்க வெற்றி பெற்றுள்ளார். ஹங்கேரியின் புடாபெஸ்டில் நடைபெற்ற போட்டியில் 91.09 மீட்டர் தூரத்தில் ஈட்டியை எறிந்து புதிய சாதனையை படைத்துள்ளார். முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த உலக இறுதி மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப் போட்டியில் கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ், ஜெர்மனியின் ஜூலியன் வெபர் போன்ற ஒலிம்பிக் பதக்கம் வென்ற விளையாட்டு வீரர்களும் ருமேஷின் போட்டியாளர்களாக இடம்பிடித்தனர். ருமேஷ் தரங்க ஈட்டி எறிதல் ஆடவர் பிரிவில் உலகத் தரவரிசையில் முன்னணியில் உள்ளார். இவ்வருடத்தின் பொதுநலவாய விளையாட்டு விழாவின் ஈட்டி எறிதல் ஆடவர் பிரிவின் தங்கப் பதக்கம் பெற்றதுடன் ஒஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக் போட்டியிலும் தங்கப் பதக்கத்தை பெற்றிருந்தார். டயமண்ட் லீக் தொடரின் முதல் 04 போட்டிகளிலும் வெற்றி வெற்ற ருமேஷ், Rome தொடரில் 92 புள்ளி 62 மீட்டர் தூரத்தைப் பதிவு செய்து கைப்பற்றினார். இது ஈட்டி எறிதல் ஆடவர் பிரிவிற்கு இந்த ஆண்டில் வீரரொருவர் வெளிப்படுத்திய சிறந்த திறமையுமாகும்.

1 min1m
News First - தமிழ்•3 நாள் முன்•2 ஊடகங்கள்
நோர்வேயின் போக்குவரத்து அமைச்சராக கம்சி குணரட்னம்

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட கம்சி குணரட்னம் நோர்வே நாட்டின் போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். நோர்வே - ஒஸ்லோவில் வசிக்கும் தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினரான கம்சி குணரட்னத்திற்கு கடந்த 11ஆம் திகதி அமைச்சு பதவி வழங்கப்பட்டது. நோர்வே பிரதமர் Jonas Gahr Støre-இனால் அண்மையில் அமைச்சரவை மாற்றம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதனுடாக 38 வயதான கம்சி குணரட்னத்திற்கு அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்னர் கம்சி குணரட்னத்திற்கு வழங்கப்பட்ட அரசியல் பொறுப்புகளை சரிவர நிறைவேற்றியுள்ளதால் நாட்டை ஒன்றிணைக்கும் வீதிகள், ரயில்கள், பொதுப் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து மற்றும் கடல்சார் போக்குவரத்திற்கு பொறுப்பாக செயற்படுவாரென நோர்வே பிரதமர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் 1988-இல் பிறந்த கம்சி குணரட்னம், 1991ஆம் ஆண்டு உள்நாட்டு போர் காரணமாக தனது குடும்பத்துடன் நோர்வேயிற்கு இடம்பெயர்ந்தார். நோர்வே ஒஸ்லோ நகர சபையில் 14 ஆண்டுகள் பதவி வகித்த அவர் 2015 முதல் 2021 வரை 06 வருடங்கள் துணை மேயராக கடமையாற்றியுள்ளார். 2025-இல் 2ஆவது தடவையாக பாராளுமன்றத்திற்கு தெரிவான கம்சி குணரட்னம், போக்குவரத்து மற்றும் தொடர்பாடல் தொடர்பான குழுவின் உப தலைவராக நியமிக்கப்பட்டார்.

1 min1m
News First - தமிழ்•3 நாள் முன்•3 ஊடகங்கள்
இந்தியா - இலங்கை பலப்பரீட்சை இன்று

2026 மகளிர் ஆசியக்கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி இன்று (13) நடைபெறவுள்ளது. டுபாயில் இன்று இரவு 08 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்த போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை மகளிர் அணிகள் பலபரீட்சை நடத்தவுள்ளன. இந்த இரு அணிகளும் 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரிலும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தன. அப்போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை மகளிர் அணி நடப்புச் சம்பியனாக திகழ்கின்றது. இலங்கை மகளிர் அணி தொடரின் இறுதி போட்டிக்கு முன்னேறிய 3ஆவது சந்தர்ப்பம் இதுவாகும். 2012 ஆம் ஆண்டு முதல் இருபதுக்கு 20 ஆசிய கிண்ண மகளிர் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி ஒவ்வொரு ஆண்டும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதுவரை இந்திய அணி 3 முறை சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துள்ளது. இந்த நிலையில் இன்றைய இறுதிப்போட்டியை தொடரின் உள்நாட்டு ஔிபரப்பு உரிமையை பெற்றுள்ள சிரச ஊடக வலையமைப்பின் டீவி வன் தொலைக்காட்சி மற்றும் WWW.SIRASATV.LK இணையத்தளம் ஊடாக இறுதிப்போட்டியை நீங்கள் நேரலையில் பார்வையிட முடியும்.

1 min1m
News First - தமிழ்•3 நாள் முன்
பஹல கடுகண்ணாவை பகுதியில் புதிய வேலைத்திட்டம்

கொழும்பு - கண்டி பிரதான வீதியில் பஹல கடுகண்ணாவ 96 முதல் 99 கிலோமீற்றர் வரையிலான பகுதி மண்சரிவு அபாயம் மிகுந்த வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தால் தயாரிக்கப்பட்ட மண்சரிவு அனர்த்த வலய வரைபடங்கள் மற்றும் அப்பகுதியில் முன்னர் இடம்பெற்ற மண்சரிவுகள் மற்றும் டித்வா புயலை தொடர்ந்து ஏற்பட்ட மண்சரிவு நிலைமைகளை கருத்திற்கொண்டு குறித்த பகுதி அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த பகுதிகளை உள்ளடக்கிய வகையில் மண்சரிவு அபாயத்தை குறைக்கும் திட்டத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்கத் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக 101 . 3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் வெளிநாட்டு கடன் உதவியின் கீழ் 80 மில்லியன் அமெரிக்க டொலர்களும், இலங்கை அரசாங்கத்தின் பங்களிப்பாக 21.3 மில்லியன் அமெரிக்க டொலர்களும் அடங்குகின்றன. இந்த திட்டத்தின் பணிகள் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் நிறைவு செய்யப்படவுள்ளன.

1 min1m
News First - தமிழ்•4 நாள் முன்•6 ஊடகங்கள்
பாகிஸ்தானை வீழ்த்திய இலங்கை மகளிர் அணி

மகளிருக்கான ஆசிய கிண்ண இருபதுக்கு20 கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது. இதற்கான அரைஇறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 6 விக்கெட்டுகளால் இலங்கை அணி வெற்றிகொண்டது. துபாயில் நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் மகளிர் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 130 ஓட்டங்களைப் பெற்றது. இறுதி வரை ஆட்டமிழக்காத அணித்தலைவி பாத்திமா சனா 36 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 4 பௌண்டரிகளுடன் 47 ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் சமரி அத்தபத்து, சமுதி பிரபோதா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சுகந்திகா குமாரி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். வெற்றி இலக்கான 131 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய இலங்கை மகளிர் அணி 1.3 ஓவர்களில் 5 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றத்திற்குள்ளானது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அணித்தலைவி சமரி அத்தபத்து 5 ஓட்டங்களுடனும் சஞ்சனா காவிந்தி ஓட்டமின்றியும் ஆட்டமிழந்தனர். எனினும், மற்றைய ஆரம்பத் துடுப்பாட்ட வீராங்கனையான இமேஷா துலானி 24 ஓட்டங்களைப் பெற்று ஆறுதல் அளித்தார். 33 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்ட நிலையில் இணைந்த ஹர்சிதா சமரவிக்ர மற்றும் கவிஷா தில்ஹாரி ஜோடி பொறுப்பை உணர்ந்து அபாரமாகத் துடுப்பெடுத்தாடி வெற்றிக்கு வித்திட்டது. இவர்கள் 5ஆம் விக்கெட்டுக்காக 59 பந்துகளில் 67 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். ஹர்சிதா சமரவிக்ரம 2 பௌண்டரிகளுடன் 36 ஓட்டங்களையும் கவிஷா தில்ஹாரி 4 பெண்டரிகளுடன் 33 ஓட்டங்களையும் பெற்றனர். இலங்கை மகளிர் அணி 17 ஓவர்களில் 109 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அதன்படி இலங்கை வெற்றிபெற கைவசம் 4 விக்கெட்டுகள் இருக்க 18 பந்துகளில் 22 ஓட்டங்கள் தேவைப்பட்டது. நிலக்‌ஷிகா சில்வா 10 பந்துகளில் 3 பௌண்டரிகளுடன் 18 ஓட்டங்களையும் கவுசினி நுத்யங்கனா 4 பந்துகளில் ஒரு சிக்ஸருடன் 10 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்று வெற்றியை உறுதிசெய்தனர். இலங்கை மகளிர் அணி 18.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு வெற்றியீட்டி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. இறுதிப் போட்டியில் இலங்கை மற்றும் இந்திய மகளிர் அணிகள் நாளை இரவு மோதவுள்ளன.

1 min1m
News First - தமிழ்•4 நாள் முன்
இந்த ஆண்டில் 37 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள்

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் 37 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அவற்றில் 32 சம்பவங்கள் திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுக்களிடையே இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இந்த துப்பாக்கிப் பிரயோகங்களில் 18 பேர் உயிரிழந்ததுடன் 20 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகங்களினால் 16 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

1 min1m
News First - தமிழ்•4 நாள் முன்
பழைய போகம்பர சிறைச்சாலை விரைவில் திறப்பு

பழைய போகம்பர சிறைச்சாலையில் அடுத்த வாரத்திற்குள் கைதிகளை அனுப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறைச்சாலையின் புனரமைப்புப் பணிகளில் 90 வீதத்திற்கும் அதிகமானவை நிறைவடைந்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பிரசாத் ஹேமந்த குமார தெரிவித்தார். போகம்பர சிறைச்சாலைக்கான கடமைகளில் அதிகாரிகளை ஈடுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன், ஓய்வுபெற்ற அதிகாரிகளை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டு வருவதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மேலும் கூறினார்.

1 min1m
News First - தமிழ்•5 நாள் முன்
வறட்சியால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயர்வு

வறட்சியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை1,61,451 ஆக உயர்வடைந்துள்ளது. 08 மாவட்டங்களை சேர்ந்த 49,344 குடும்பங்களை சேர்ந்தவர்களே பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் தெரிவித்துள்ளது. வறட்சியால் மொனராகலை மாவட்டத்திலேயே அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 42,429 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் 33,394 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் தெரிவித்துள்ளது. மாத்தளை மாவட்டத்தில் 37,521 பேரும், அம்பாறை மாவட்டத்தில் 12,47 பேரும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர். அனுராதபுரம், பதுளை, பொலன்னறுவை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் சில பிரதேச செயலக பிரிவுகளை சேர்ந்த மக்களும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர். வறட்சியால் பாதிக்கப்பட்ட 1,40,32 பேருக்கு குடிநீரை விநியோகிக்கும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் தெரிவித்தது.

1 min1m
News First - தமிழ்•5 நாள் முன்
IMF பொருளாதார மீட்சிக்கு நிதி ஸ்திரத்தன்மை அவசியம்

நாட்டின் நீண்டகால பொருளாதார மீட்சிக்கு நிதி ஸ்திரத்தன்மையை மறுசீரமைப்பது அத்தியாவசியமாகும் எனவும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் எனவும் சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது. பொருளாதார நெருக்கடி நிலைமையை அடுத்து நிதி ஸ்திரத்தன்மையை மறுசீரமைப்பதற்காக முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதி திட்டத்தில் பிரதானமாக வருமான அடிப்படையிலான நிதி ஒருங்கிணைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் 2022ஆம் ஆண்டுக்கு பின்னர் நாட்டின் நிதி சார் நடவடிக்கைகள் கணிசமாக முன்னேற்றமடைந்துள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார். மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான வரி வருமானம் 2025 இல் 15.04 சதவீதமாக பதிவாகியுள்ள நிலையில் அது இருமடங்கிற்கும் அதிகமாக உயர்வடைந்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. பொருளாதார நெருக்கடி மற்றும் கொள்கை மாற்றங்களின் தாக்கங்களில் இருந்து வறியவர்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களை பாதுகாப்பதற்காக சமூக பாதுகாப்பு வலையமைப்பை வலுப்படுத்துவதும் சர்வதேச நாணய நிதியத்தின் முக்கிய செயற்பாடாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். வறுமையைக் குறைப்பதை இலக்காகக் கொண்ட 'அஸ்வெசும' நலன்புரித் திட்டத்தின் வரம்பையும் இலக்குகளையும் மேம்படுத்துவதற்கான முயற்சிகள் ஒரு சிறந்த ஆரம்பம் என சுட்டிக்காட்டிய சர்வதேச நாணய நிதிய பேச்சாளர், சமூகச் செலவினங்களை பாதுகாப்பதற்காக குறித்த திட்டத்தில் குறைந்தபட்ச சமூகச் செலவின வரம்பும் இணைக்கப்பட்டுள்ளதாக கூறினார். எதிர்காலத்தில் பொருளாதார மீள்தன்மையை கட்டியெழுப்பவும், வணிகச் சூழலை மேம்படுத்தவும், வரிமுறைமையை பொருளாதார வளர்ச்சிக்கு ஏதுவானதாக மாற்றவும் வருமானத் திரட்டலை தொடர்ந்து பேணுவது மிக முக்கியமானது என பேச்சாளர் குறிப்பிட்டார். இதற்காக நடுத்தர கால வருமான மூலோபாய திட்டமொன்றை உருவாக்கி நடைமுறைப்படுத்துவது அவசியமாகும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். போதியளவான நிதி கையிருப்புகளையும் வலுவான நிதி ஸ்திரத்தன்மையையும் பேண வேண்டியதன் அவசியத்தைக் கருத்தில் கொண்டு, வரி விதிப்பு மற்றும் வரி சலுகைகளை மிகவும் எச்சரிக்கையுடன் தொடர்ந்தும் பேண வேண்டும் எனவும் சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

1 min1m
News First - தமிழ்•5 நாள் முன்
கோட்டாபய ராஜபக்ஸ நிதிகுற்ற விசாரணைபிரிவிற்கு வருகை

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நிதி குற்ற விசாரணை பிரிவில் முன்னிலையாகியுள்ளார். நிதி குற்ற விசாரணை பிரிவினால் விடுக்கப்பட்ட அழைப்பிற்கமைய அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார். மிக் விமானக் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைக்களுக்கமைய, வாக்குமூலம் பதிவு செய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

1 min1m
News First - தமிழ்•5 நாள் முன்
43 சர்வதேச குற்றவாளிகள் கைது

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 1,104 மில்லியன் ரூபா பெறுமதியான சட்டவிரோத சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இவற்றில் 978.9 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துகளும் வீடுகளும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட 109 மில்லியன் ரூபா பெறுமதியான வாகனங்கள் மற்றும் 14 மில்லியன் ரூபா பணத்தின் பயன்பாட்டை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே 2023 முதல் இதுவரையான காலப்பகுதியில் சர்வதேச சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டிருந்த 43 குற்றவாளிகள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அத்துடன் சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்படாத 38 குற்றவாளிகளும் குறித்த காலப்பகுதியில் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ள மேலும் 95 பேர் வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ. வூட்லர் தெரிவித்தார். 1818 என்ற துரித இலக்கத்திற்கு குற்றவாளிகள் குறித்த தகவல்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் கிடைக்கப்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதற்கமைய குறித்த துரித இலக்கம் ஊடாக இதுவரையில் 7,071 தகவல்கள் கிடைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

1 min1m
News First - தமிழ்•5 நாள் முன்
தெஹிவளை கைக்குண்டு தாக்குதலில் 2 சிறுவர்கள் பலி

தெஹிவளை - ஸ்ரீ சங்கபோதி மாவத்தை பகுதியிலுள்ள வீடொன்றின் மீது நடத்தப்பட்ட கைக்குண்டு தாக்குதலில் 2 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். அத்துடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ.வூட்லர் தெரிவித்தார். 11 மற்றும் 17 வயதுகளையுடைய 2 சிறார்களே உயிரிழந்துள்ளனர். தாக்குதலில் குறித்த இரு சிறார்களின் தந்தையே காயமடைந்துடன் அவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றார். இன்று (11) அதிகாலை சுமார் 03.20 அளவில் இந்த கைக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் 2 குழுக்களிடையே நிலவும் மோதலின் விளைவாக இந்த குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

1 min1m
News First - தமிழ்•6 நாள் முன்•9 ஊடகங்கள்
துமிந்த திசாநாயக்கவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை

வெள்ளவத்தை ஹவ்லொக் சிட்டி தொடர்மாடி குடியிருப்பில் தங்கமுலாம் பூசப்பட்ட துப்பாக்கி மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவிற்கும் மற்றுமொரு பெண்ணுக்கும் எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க முன்னிலையில் இன்று(10) வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து பிரதிவாதிகளான முன்னாள் அமைச்சர் மற்றும் வழக்குடன் தொடர்புடைய பெண் ஆகியோரை பிணையில் விடுவிக்குமாறு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். தலா 50,000 ரூபா ரொக்கப்பிணை மற்றும் 20 இலட்சம் ரூபா பெறுமதியான 02 சரீரப் பிணைகளில் இருவரையும் விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் கடந்த வருடம் மே 23ஆம் திகதி பயங்கரவாத விசாரணைப்பிரிவினரால் முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கைது செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

1 min1m
News First - தமிழ்•6 நாள் முன்
மின்னேரியா பஸ் விபத்தில் 20 பேர் காயம்

பொலன்னறுவை - ஹபரணை பிரதான வீதியின் மின்னேரியா, 7ஆவது மைல்கல் பகுதியில் பஸ் விபத்திற்குள்ளானதில் 20 பேர் காயமடைந்துள்ளனர். பஸ் வீதியை விட்டு விலகி கால்வாய்க்குள் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் காயமடைந்தவர்களில் 16 பேர் பொலன்னறுவை வைத்தியசாலையிலும் நால்வர் ஹபரணை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மெதிரிகிரிய - அம்பகஸ்வெ பகுதியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ்யே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

1 min1m
News First - தமிழ்•9 செப்., 2026•2 ஊடகங்கள்
தோட்ட தொழிலாளர்களுக்கான கொடுப்பனவுகள் நாளை முதல்..

சுமார் 20 வருடங்களாக தோட்ட தொழிலாளர்களுக்கு செலுத்தப்பட வேண்டிய சேவைக்கால கொடுப்பனவு நாளை முதல் வழங்கப்படவுள்ளது. இதற்கான ஆரம்ப நிகழ்வு கண்டி மாவட்ட செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு தெரிவித்துள்ளது. பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்தியாரத்ன, தொழில் அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ மற்றும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர். இந்த திட்டத்திற்காக 4.5 பில்லியன் ரூபா, பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை அரச பெருந்தோட்ட கூட்டுதாபனத்தின் தலைவர் கலாநிதி சிசிர ரணதுங்க தெரிவித்துள்ளார்.

1 min1m
News First - தமிழ்•9 செப்., 2026
கொண்ட ரஞ்சித் கைது

திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளியான கொண்ட ரஞ்சித் என அழைக்கப்படும் ரஞ்சித் குமார கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொண்ட ரஞ்சித், துபாயில் இருந்து நாட்டிற்கு இன்று (09) அழைத்துவரப்பட்ட போது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

1 min1m
News First - தமிழ்•9 செப்., 2026
நல்லூர் கந்தனின் இரதோற்சவப் பெருவிழா

தமிழும் சைவமும் தழைத்தோங்கும் யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழாவில் இன்று (09) இரதோற்சவம் இனிதே நிறைவடைந்தது. ​நல்லையம்பதியின் இரதோற்சவத்தை முன்னிட்டு இன்று காலை வசந்த மண்டபத்தில் சர்வ அலங்காரங்களுடன் வீற்றிருக்கும் நல்லூர் சண்முகநாருக்கும் தேவியர் இருவருக்கும் விசேட பூஜைகள் இடம்பெற்றன. தொடர்ந்து வேத மந்திர தோத்திர பாராயணங்கள் நடைபெற்று சண்முகப் பெருமான் இரதத்தில் ஆரோகணிக்கப்பட்டு காண்டாமணி ஓசையுடன் மங்கள வாத்தியங்கள் முழங்க இரதோற்சவம் பக்தி மயமாக நடைபெற்றது. நல்லூர் ஆலய தீர்த்தோற்சவத் திருவிழா நாளை(10) காலை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 min1m
News First - தமிழ்•9 செப்., 2026•12 ஊடகங்கள்
இந்திய பாதுகாப்பு அமைச்சர் - ஜனாதிபதி சந்திப்பு

நாட்டிற்கு விஜயம் ​மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார். இதனையடுத்து இந்திய பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்பு அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பும் நடைபெறவுள்ளது. அவர் நாளை(10) காலை நுவரெலியா சீதையம்மன் கோவிலுக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது, இந்தியா மற்றும் இலங்கை இடையே 03 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

1 min1m
News First - தமிழ்•7 செப்., 2026
மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற இலக்கத் தகடுகள்

அனைத்து மின்சார வாகனங்களுக்கும் பச்சை நிறப் பின்னணியைக் கொண்ட இலக்கத் தகடுகள் வழங்கப்படும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. மின்சார வாகனங்களுக்காக வழங்கப்படும் பச்சை நிற இலக்கத் தகடுகள் சட்டபூர்வமானவை என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் துஷார பெர்னாண்டோ தெரிவித்தார். ஏனைய வாகனங்களுக்கு வெள்ளை மற்றும் மஞ்சள் நிறங்களைக் கொண்ட இலக்கத் தகடுகள் வழங்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். இதனிடையே பதிவு செய்யப்பட்ட 88,740 வாகனங்களுக்கான புதிய இலக்கத் தகடுகள் தயாரிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. அவற்றில் 2026 ஜூன் 10 ஆம் திகதி முதல் 2026 ஓகஸ்ட் 31 ஆம் திகதி வரை பதிவு செய்யப்பட்ட 56,233 இலக்கத் தகடுகளும் அடங்குவதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம், ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் துஷார பெர்னாண்டோ குறிப்பிட்டார். அத்துடன் 2023 , 2024 ஆகிய 2 வருடங்களில் பதிவு செய்யப்பட்ட 32,507 வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளும் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். எனவே சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்கள் நாராஹேன்பிட்டியில் உள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள அலுவலகத்திற்கு வருகை தந்து, தமது வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளைப் பெற்றுக்கொள்ளுமாறு ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

1 min1m
News First - தமிழ்•7 செப்., 2026•2 ஊடகங்கள்
மகளிர் ஆசிய கிண்ணம்: அரையிறுதியில் இலங்கை

2026 ஆசிய கிண்ண மகளிருக்கான இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு ​தோல்வியை காணாத அணியாக நடப்பு சம்பியனான இலங்கை மகளிர் அணி தகுதி பெற்றுள்ளது. பங்களாதேஷ் அணியுடனான நேற்றைய போட்டியில் 04 விக்கெட்டுகளினால் வெற்றியீட்டியமையின் ஊடாக இலங்கை மகளிர் அணி இம்முறை தொடரின் அரையிறுதிக்குள் நுழைந்தது. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 08 விக்கட்டுக்களை இழந்து 114 ஓட்டங்களை பெற்றது. பந்துவீச்சில் சமுதி பிரபோதா 03 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 19.2 ஓவர்களில் 06 விக்கட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. ஹர்ஷிதா சமரவிக்ரம ஆட்டமிழக்காமல் 48 ஓட்டங்களை பெற்று அணிக்கு வலுசேர்த்தார். 2026 - மகளிர் ஆசிய கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும், உள்நாட்டு ஔிபரப்பு உரிமையை பெற்றுள்ள சிரச ஊடக வலையமைப்பின் TV1 தொலைக்காட்சி மற்றும் WWW.SIRASATV.LK இணையத்தளம் ஊடாக நீங்கள் நேரலையில் பார்வையிட முடியும்.

1 min1m