1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
வேலுப்பிள்ளை பிரபாகரனின் பெயரை உச்சரிப்பதற்கே சிக்கல் - சபையில ரவிகரன் எம்பி சாடல்
நாடாளுமன்றத்தில் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பெயரை உச்சரிப்பதற்கே எதிர்ப்பு தெரிவிக்கும் உங்களால், இனப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வை வழங்க முடியும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சுருக்கம்
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின் போது, இன்று (26) நீதி மற்றும் தேசிய ஒற்றுமை அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றிய ரவிகரன், வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இதன்போது சபைக்கு தலைமை தாங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்க மாதுகொட, பிரபாகரனின் பெயரில் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவிப்பது தொடர்பில் நடவடிக்கை எடுக்க செயலாளர் குழுவிடம் முன்மொழிவதாகக் கூறினார்.
