1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
சுதந்திரக் கட்சியின் நெருக்கடிக்கு மைத்திரியே காரணம் : எழுந்துள்ள குற்றச்சாட்டு
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு முன்னாள் தலைவர் மைத்திரிபால சிறிசேனவே பிரதான காரணம் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
சுருக்கம்
விஜயதாச ராஜபக்சவை தலைவராக்கியதும், 52 நாள் அரசாங்கத்தில் மகிந்த ராஜபக்சவை பிரதமராக்கியது மற்றும் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களை எதிர்க்கட்சியில் அமர அனுமதித்தது போன்ற தவறான தீர்மானங்களை மைத்திரிபால சிறிசேன எடுத்தார். பசில் ராஜபக்சவின் தூண்டுதலாலேயே மைத்திரிபால சிறிசேன இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.
