ஆட்சி அதிகாரத்தைப் பெற்று இரண்டு வருடங்களுக்குள் அரசியல் துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கைச் செய்தி நிறுவனங்களின் சமீபத்திய அரசாங்கம் செய்திகள்.
ஆட்சி அதிகாரத்தைப் பெற்று இரண்டு வருடங்களுக்குள் அரசியல் துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் வருமான இலக்குகளுக்கு எந்த வித அச்சுறுத்தலும் ஏற்படாத வகையில், எதிர்வரவிருக்கும் பாதீட்டு திட்டத்தில் சில வரிகளைக் குறைப்பத

பேரிடரின்போது பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதுடன், மீண்டும் அவ்வாறான பேரிடர்கள் ஏற்படாதவாறு தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

சட்டம் சமத்துவமற்ற முறையில் பயன்படுத்தப்படுவதாக உணரப்படும் ஒரு சமூகம், ஒருபோதும் நிலையான மற்றும் நல்ல சமூகமாக மாறாது என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார். தேசிய மக்கள் சக்தியின் தேசிய அறிஞர்கள் அமைப்பின் தேசிய மாநாட்டில் இன்று (31)


சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நவம்பர் 3ஆம் திகதி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படாது!
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான பிமலின் கூற்றுக்கு அஜித்தின் பதில்
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதம் நவம்பர் 3 இல் இல்லை
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நவம்பர் 3ஆம் திகதி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படாது!
நவம்பர் முதலாவது பாராளுமன்ற அமர்வு வாரத்திற்கான அலுவல்கள் தீர்மானிக்கப்பட்டன பாராளுமன்றத்தை எதிர்வரும் நவம்பர் மாதம் 03ஆம் திகதி முதல் 06ஆம் திகதி வரை கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர அவர்கள் தெரிவித்தார். பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி அவர்களின் தலைமையில் இன்று (30) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இது பற்றிய தீர்மானம் எடுக்கப்பட்டது. ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதற்கு அமைய பாராளுமன்றம் கூடும் சகல தினங்களிலும் மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22(1) இலிருந்து (6) வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கும், மு.ப. 10.00 மணி முதல் மு.ப. 11.00 மணி வரை வாய்மூல விடைகளுக்கான வினாக்களுக்காகவும், மு.ப. 11.00 மணி முதல் மு.ப. 11.30 மணி வரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான கேள்விகளுக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. நவம்பர் 03ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 11.30 மணிக்கு 1983 கறுப்பு யூலை துன்பியல் சம்பவம் மற்றும் அதன் தாக்கம் குறித்து முழுமையான ஆய்வொன்றை மேற்கொண்டு அறிக்கையிடுவதற்கும் தேசிய சகவாழ்வை உறுதிப்படுத்துதல் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பான அதன் முன்மொழிவுகளையும் பரிந்துரைகளையும் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழுவை நியமிப்பது தொடர்பான பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதனையடுத்து மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது. இதற்கு முன்னர் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சியினால் கையளிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களைப் பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகளுக்கு அமைய திருத்தம் செய்து மீண்டும் சமர்ப்பிக்குமாறு எதிர்க்கட்சிக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், திருத்தப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்படாத காரணத்தினால், ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தவாறு அன்றைய தினம் அதனை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளாமலிருக்கத் தீர்மானிக்கப்பட்டது. நவம்பர் 04ஆம் திகதி புதன்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணிவரை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் 2508/27 ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் மற்றும் குறைநிரப்பு மதிப்பீடு தொடர்பான விவாதம் இடம்பெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. நவம்பர் 05ஆம் திகதி வியாழக்கிழமை, மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை நம்பிக்கைப் பொறுப்புகள் (திருத்தச்) சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீடு விவாதம் இடம்பெறவுள்ளது. (அரசியலமைப்பின் 121ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர்நீதிமன்றத்தில் எவ்வித மனுக்களும் தாக்கல் செய்யப்படாத பட்சத்தில்) இதன் பின்னர் பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை மீதான விவாதத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நவம்பர் 06ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை கீழ்வரும் தனியார் உறுப்பினர் பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினரின் பெயர்கள் தனியார் உறுப்பினர் பிரேரணை சட்டத்தரணி சித்ரால் பெர்னாந்து புத்தளம் புகையிரதப் பாதையில் புகையிரத சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்றைத் தயாரித்தல் லசித் பாஷண கமகே வீதி ஒதுக்குப் பிரதேசங்களில் மரங்களை நடுதல், அறிவியல் ரீதியாக முகாமை செய்தல் மற்றும் பராமரித்தல் ஆகியவற்றுக்கான முறையான வழிமுறையொன்றைத் தயாரித்தல் சட்டத்தரணி ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி இலங்கையின் சகல கல்வியியற் கல்லூரிகளையும் பல்கலைக்கழக பீடங்களாக மாற்றுதல், ரவீந்திர பண்டார சூட்டிகை வலுசக்திக் கட்டமைப்பையும் சூட்டிகை மின் மானிகளையும் அறிமுகம் செய்தல், ரோஹண பண்டார நீச்சல் திறமைகளை மேம்படுத்துவதற்கான நிகழ்ச்சித்திட்டமொன்றை தயார் செய்தல் உபுல் கித்சிறி உடவளவை பிரதேசத்தை சுற்றுலா வலயமாக பிரகடனப்படுத்தல், சட்டத்தரணி ஹிருணி விஜேசிங்க நீர்த்தாமரை செடியின் பரவலை சாதகமான வகையில் கட்டுப்படுத்துதல் மற்றும் அழித்தல் இதனைத் தொடர்ந்து பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை மீதான விவாதத்திற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் நீதியரசருமான சீ.வி. விக்னேஸ்வரனின் மகன் நிர்மலகுகன் விக்னேஸ்வரன் மேலதிக சொலிஸிஸ்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார். நிர்மலகுகன் விக்னேஸ்வரன் எதிர்வரும் 2 ஆம் திகதி ஜனாதிபதி சட்டத்தரணியாக பதவிப்பிரமாணம் செய்யவ

சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஞானசார தேரரின் விடுதலைக்காக விகாதரமஹாதேவி பூங்காவில் முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரகம் முடிந்த பின்னரும் அது தொடர்பான சில தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதாவது தேரர்களின் சத்தியாக்கிரகம் நடந்து கொண்டிருந்த போது தற்போதைய

- அமைச்சர் லால் காந்த நாட்டின் சட்டம் எவ்வித வேறுபாடுமின்றி அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிப்படுத்த தற்போதைய அரசாங்கம் கடமைப்பட்டுள்ளதாகவும், சமூக ஊடகங்கள் ஊடாக எவ்வளவு கடுமையான அவதூறுகளும் கேலிகளும் முன்வைக்கப்பட்டாலும், மக்கள் ஆணைய

இலங்கையின் தற்போதைய அரசியல் சூழலில், அரசாங்க நிர்வாகத்தில் கொண்டுவரப்படும் மாற்றங்கள், சட்டத்தின் ஆட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் அணுகுமுறைகள் குறித்து பரவலான விவாதங்கள் எழுந்துள்ளன. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்
செயற்கை நுண்ணறிவு மூலம் பல வாய்ப்புகள் உருவாகினாலும், அதனைப் பொறுப்புடன் பயன்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனப் பிரதமர் கலாநித

ரூ. 11.2 பில்லியன் ஒதுக்கீடு - தினசரி செலவு ரூ. 30.7 மில்லியன் எனக் குற்றச்சாட்டு புதிய ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின்படி, ஜனாதிபதி அலுவலகத்திற்காக ரூ. 11.2 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இதன்படி நாளாந்த செலவு ரூ. 30.7 மில்லியன் வரை அதிகரித்துள்ளதாக

கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவது ஜனநாயகத்துக்கு எதிரானது என விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்துள்ளார். தமக்கு வேண்டியவர்களை விடுவிப்பதற்காக ஜனாதிபதியின் அதிகாரத்தை பயன்படுத்தும் நடைமுறையை நீக்கவ

யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பாகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கை குறித்து நீதிமன்ற உத்தரவுகளுக்கு அமைவாகவே அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் த

பாராளுமன்றத்தை எதிர்வரும் நவம்பர் மாதம் 03ஆம் திகதி முதல் 06ஆம் திகதி வரை கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் தலைமையில் அண்மையில் (23) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இது பற்றிய தீர்மானம் எடுக்கப்பட்டது.
