1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
மீண்டும் தங்க விருதை வென்ற ஹலால் கவுன்சில்! 'CNCI Achiever Awards 2026' இல் இரட்டை கௌரவம்
2024 இல் வெள்ளி விருதில் இருந்து ஆரம்பித்து, 2025 மற்றும் 2026 ஆகிய இரண்டு வருடங்களிலும் தங்கம் மற்றும் சிறந்த சாதனையாளர் விருதுகளைப் பெற்று, HAC அமைப்பானது சேவைக்கான விசேடத்துவத்தில் தேசிய கௌரவத்தை தொடர்ச்சியாக மூன்றாவது வருடமாக பெற்று கொண்டாடுகிறது.
சுருக்கம்
இலங்கை தேசிய கைத்தொழில் சபை (CNCI), கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சுடன் இணைந்து முன்னெடுத்த கைத்தொழில்துறை விசேடத்துவத்திற்கான 25ஆவது 'CNCI Achiever Awards 2026' நிகழ்வில், ஹலால் சான்றுறுதிப் பேரவை (Halal Assessment Council (Guarantee) Limited - HAC) மீண்டுமொரு முறை மதிப்புமிக்க தங்க விருதையும், "Top Achievers Award" எனப்படும் சிறந்த சாதனையாளர் விருதையும் வென்றுள்ளது.
