1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
ஸ்பெயினில் வெடித்த போராட்டம்: 24 மணி நேர வேலைநிறுத்தத்தால் ஸ்தம்பித்த நாடு!
ஸ்பெயின் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் 24 மணி நேரப் பொது வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். வீடமைப்புச் செலவுகள் மற்றும் வாடகை உயர்வைக் கண்டித்து இந்த வேலைநிறுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சுருக்கம்
வீடமைப்புச் செலவுகள் மற்றும் வாடகை உயர்வைக் கண்டித்து இந்த வேலைநிறுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் தொழிற்சங்கங்கள் மற்றும் வாடகைதாரர்கள் அமைப்புகள் முன்னெடுத்த இப்போராட்டத்தில் வாகன உற்பத்தித் துறை மற்றும் துறைமுகங்களில் 90 வீதம் ஊழியர்களும் மற்றும் கழிவு சேகரிப்புத் துறையில் 82 வீதம் ஊழியர்களும் பங்கேற்றனர்.
