1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
இதுவரை யாரும் அறியாத பாம்பு இனம்... ஆய்வாளர்களின் புதிய கண்டுபிடிப்பு! இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இதுவரை அடையாளம் காணப்படாத புதிய வகை மரப்பாம்பு இனத்தை ஆய்வாளர்கள் அதிகாரப்பூர்வமாக அடையாளம் கண்டுள்ளனர். 'பெடோம்ஸ் பிரான்ஸ்பேக்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் பாம்பு, இதற்கு முன்னர் 'லார்ஜ்-ஐட் பிரான்ஸ்பேக்' என்ற மற்றொரு இனத்துடன் தவறாக அடையாளம் காணப்பட்டு வந்துள்ளது. பழைய ஆய்வுப் பதிவுகள், பாம்பு மாதிரிகள், நேரடிக் கள ஆய்வுகள் மற்றும் பொதுமக்கள் பகிர்ந்த நிழற்ப்படங்கள் ஆகியவற்றை ஆராய்ந்த பின்னரே இந்த வேறுபாடு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் புதிய வகை பாம்புகள் சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிற நாக்கையும், உடலின் பக்கவாட்டில் வெள்ளை நிற அடையாளங்களையும் கொண்டுள்ளன. இவை மேற்கு தொடர்ச்சி மலையின் தாழ்வான பகுதிகளில், குறிப்பாக மேற்குச் சரிவுகளில் அதிகளவில் காணப்படுகின்றன. கர்நாடகாவின் புத்தூர் முதல் ஜோக் அருவி வரையிலும், கேரளாவின் வயநாடு முதல் கர்நாடகாவின் உத்தர கன்னடா வரையிலான பகுதிகளிலும் இவற்றின் வாழ்விடங்கள் பரவியுள்ளன. இந்த ஆய்வு 2026 நவம்பர் மாதம் 'டப்ரோபனிகா' (Tropobionica) ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், வாழ்விடப் பரப்பின் வரையறை மற்றும் வீதிவிபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பு அபாயங்களைக் கருத்திற்கொண்டு, இந்தப் பாம்பு இனத்தை அச்சுறுத்தலுக்கு அருகிலுள்ள இனமாக வகைப்படுத்த ஆய்வாளர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இதுவரை அடையாளம் காணப்படாத புதிய வகை மரப்பாம்பு இனத்தை ஆய்வாளர்கள் அதிகாரப்பூர்வமாக அடையாளம…
