1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
யாழில் கொடூரம் : சினைப்பசுவைக் கொன்று கன்றை வெளியே வீசிய கும்பல் : இருவர் கைது!
யாழ்ப்பாணம் வேலணை - புங்குடுதீவு மடத்துவெளி பகுதியில் நிறைமாதக் கர்ப்பிணிப் பசு உள்ளிட்ட இரண்டு பசுக்கள் கொல்லப்பட்டு, அவற்றில் ஒன்று இறைச்சியாக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சுருக்கம்
புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் ஆலயத்திற்கு அருகிலுள்ள காணியொன்றில், பிரதான வீதியிலிருந்து சுமார் 50 மீற்றர் தொலைவில் இச்சம்பவம் இன்று அதிகாலை (4.11.2026) இடம்பெற்றுள்ளது. இதன்போது சினைப்பசுவின் வயிற்றிலிருந்த முழுமையான உடலமைப்பைக் கொண்ட கன்றை வெளியே எறிந்துவிட்டு, பசுவை இறைச்சியாக்கியுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
