1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
கிண்ணியா அல் அக்ஸா வித்தியாலய கேட்போர் கூடத்தை இடித்து அகற்றியதில் ஏதேனும் தவறு நிகழ்ந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கத் தயார்
திருகோணமலை, கிண்ணியா அல் அக்ஸா வித்தியாலயத்தில் அமைந்திருந்த எம். ஈ.எச் மஹ்ரூப் கேட்போர் கூடம் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்டமையால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பொறியியலாளர்களின் சிபாரிசின் பேரில் 2022ஆம் ஆண்டு பெப்ரவரி 15ஆம் திகதி இடித்து அகற்றப்பட்டதாகவும், அதில் ஏதேனும் தவறு நிகழ்ந்துள்ளதாகத் தகவல்கள் கிடைத்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
சுருக்கம்
அதற்கு மேலதிகமாக, கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர், மாகாணப் பொறியியலாளர் ஆகியோரின் சிபாரிசுகளுக்கும், மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வி, பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்விச் சேவைகள் இராஜாங்க அமைச்சின் பொறியியல் பிரிவுக்குப் பொறுப்பான மேலதிகச் செயலாளரின் சிபாரிசுக்கும் அமையவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
