1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
பெருமளவு இந்திய சுற்றுலா பயணிகளுடன் கொழும்பிற்கு வந்தது சொகுசு கப்பல்
'கோர்டெலியா எம்பிரஸ்' எனும் பயணிகள் சொகுசு கப்பல், 1,600 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 588 பணியாளர்களுடன் இன்று (26) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
சுருக்கம்
இந்தக் கப்பல் கொழும்பில் தரித்திருக்கும் வேளையில், கப்பலில் வந்த சுமார் 1,800 பேர் கொழும்பு நகரம், பின்னவல யானைகள் சரணாலயம் மற்றும் காலி ஆகிய இடங்களுக்குச் சுற்றுலா மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளனர். முதன்மையாக இந்திய மற்றும் தெற்காசிய சுற்றுலாச் சந்தைகளை இலக்காகக் கொண்டு இயங்கும் 'கோர்டெலியா எம்பிரஸ்', இந்தியாவிற்குள் உள்நாட்டுப் பயணங்களையும், பிராந்திய ரீதியிலான சர்வதேசக் கடல் பயணங்களையும் மேற்கொள்கிறது.
