ஆசிய அபிவிருத்தி வங்கியின் 2026–2029 இலங்கை அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல்
இலங்கையின் பிரதான அபிவிருத்தி பங்காளிகளில் ஒருவரான ஆசிய அபிவிருத்தி வங்கியின் 2026-2029 காலப்பகுதிக்குரிய இலங்கை அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாரநாயக்க மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கை வதிவிடப் பணிப்பாளர் ஷெனன் கௌலின் (Shannon Cowlin) ஆகியோரின் தலைமையில் அண்மையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
