2 ஊடகங்கள் புதுப்பிக்கப்பட்டது
விண்ணைத்தொடும் வெங்காயம் - முட்டை விலைகள் - மத்திய வங்கியின் புதிய தகவல்!
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், நாட்டின் பல சந்தைகளில் உள்நாட்டு சிவப்பு வெங்காயம் மற்றும் முட்டையின் விலைகள் அதிகரித்துள்ளதாக இலங்கை மத…
சுருக்கம்
மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட கடந்த இரண்டு வாரங்களுக்கான வாராந்த பொருளாதாரக் குறிகாட்டிகள் அறிக்கைகளில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கமைய, கொழும்பு புறக்கோட்டை சந்தையில் ஒரு கிலோகிராம் உள்நாட்டு சிவப்பு வெங்காயத்தின் சராசரி சில்லறை விலை, நவம்பர் 13ஆம் திகதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 527 ரூபாய் 60 சதமாகப் பதிவாகியிருந்தது. இது நவம்பர் 20ஆம் திகதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 675 ரூபாயாக அதிகரித்துள்ளது.

