அறிவிப்பு: LakFeed தமிழ்ப் பதிப்பு 2026 டிசம்பர் 31 முதல் நிறுத்தப்படும்.

எங்களிடம் தமிழ் படிக்கத் தெரிந்தவர்கள் யாரும் இல்லை; தமிழ் ஆசிரியர் ஒருவரை நியமிக்கப் போதிய நிதியும் தற்போது இல்லை.

மேலும் படிக்க / Read in English

LakFeed ஒரு சிறிய சுயாதீனத் திட்டம். இங்கு வெளியாகும் உள்ளடக்கத்தின் தரத்தைச் சரிபார்க்க யாரும் இல்லாமல் இந்தப் பதிப்பைத் தொடர்ந்து நடத்துவது சரியல்ல என்று கருதுகிறோம். அந்தத் தேதிக்குப் பிறகு தமிழ்ப் பக்கங்கள் கிடைக்காது. செய்திகள், நாணய மாற்று விகிதங்கள், தங்க விலை உள்ளிட்ட சேவைகள் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் தொடர்ந்து கிடைக்கும். ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும். இதுவரை எங்களுடன் இருந்தமைக்கு நன்றி.

LakFeed's Tamil edition closes on 31 December 2026. LakFeed is a small independent project. Nobody here reads Tamil, and we cannot currently afford to hire a Tamil editor. With no one able to check what appears here, we do not think it is right to keep this edition running. After that date the Tamil pages will no longer be available. News, exchange rates, gold prices and the rest of the site stay available in English and Sinhala. We are sorry for the inconvenience, and thank you for reading.

Englishසිංහල

உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

தீம்

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்
மாற்று விகிதங்கள்ஒவ்வொரு வங்கியின் கொள்முதல், விற்பனை விகிதங்கள்
  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்
தங்க விலைகொழும்பு தங்க விலை, தினமும்
  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
பங்குகள்ஆங்கிலம்கொழும்பு பங்குகள், 15 நிமிடம் தாமதமாக
  • இன்றைய சந்தை
  • நிறுவனங்கள்
  • துறைகள்
  • நிறுவனச் செய்திகள்
எரிபொருள்பம்ப் விலைகளும் 1990 முதல் ஒவ்வொரு திருத்தமும்
  • எரிபொருள் விலைகள்
  • பயணச் செலவு கணிப்பான்
சலுகைகருவிகள்
ஆராயுங்கள்
விக்கிசெய்திகளில் வரும் நபர்கள், நிறுவனங்கள், இடங்கள், நிகழ்வுகள்
  • அனைத்துப் பக்கங்கள்
  • நபர்கள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

  • முதல் பக்கம்
  • பிரபலமானவை
  • சமீபத்திய
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • வானிலை
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • கல்வி
  • குற்றம் மற்றும் நீதிமன்றம்
  • சுகாதாரம்
ஆதாரங்கள்ஆதாரங்கள்

செய்தி ஆதாரங்கள் (14)

Asian MirrorCitizen NewsFact Crescendo தமிழ்Global Tamil NewsHiru News - TamilIBC TamilLanka News Web தமிழ்Lanka TruthNews First - தமிழ்News.lkTamil MirrorThePapare TamilThinakaranஅத தெரண
LakFeed

இலங்கை, எளிமையாக.

இலங்கையர்கள் தினமும் பார்க்கும் அனைத்தும், ஒரே இடத்தில், உங்கள் மொழியில்.

  • செய்திகள்
  • மாற்று விகிதங்கள்
  • தங்க விலை
  • எரிபொருள் விலைகள்
  • பங்குகள்
  • அட்டைச் சலுகைகள்
  • கருவிகள்
  • விக்கி
  • தள வரைபடம்
  • FAQ
  • About us
  • Contact
  • Advertise
  • Blog
  • Privacy Policy
  • Terms of Service
  • DMCA

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

  1. செய்திகள்
  2. /
  3. உள்ளூர்

1 ஊடகம்·19 நிமி. முன் புதுப்பிக்கப்பட்டது

தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் 2025/2026 இன் இலங்கை கடற்படை முதலிடம் திருகோணமலை கடற்படை மருத்துவமனை இரண்டாம் நிலை

தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் 2025/2026 இன் அரசாங்கத் துறைகள் மற்றும் திணைக்களங்களுக்கு இடையிலான பிரிவில் இலங்கை கடற்படை முதலிடத்தைப் பிடித்துள்ளதுடன் திருகோணமலை கடற்படை மருத்துவமனை, தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் 2025/2026 இல் அரசாங்கத் துறையின் நுண் அளவிலான நிறுவனங்கள் பிரிவில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் 2025/2026 இல் அரசாங்கத் துறைகள் மற்றும் திணைக்களங்களுக்கு இடையிலான பிரிவில் முதல் இடங்களைப் பெற்ற நான்கு (04) நிறுவனங்களுள் ஒன்றாகத் தெரிவுசெய்யப்பட்ட இலங்கை கடற்படை, தேசிய உற்பத்தித்திறன் விருதினை வெற்றிப்பெற்றுள்ளது. கௌரவ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் இன்று (2026 நவம்பர் 08) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற தேசிய உற்பத்தித்திறன் விருது வழங்கும் விழாவில், குறித்த உற்பத்தித்திறன் விருதினை கௌரவ ஜனாதிபதி அவர்கள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ அவர்களிடம் வழங்கி வைத்தார். தேசிய உற்பத்தித்திறன் விருதுப் போட்டியானது, கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்படும் வருடாந்த நிகழ்ச்சித்திட்டமாகும். 'க்ளீன் ஸ்ரீலங்கா' தேசிய வேலைத்திட்டத்துடன் இணைந்து முன்னெடுக்கப்படும் இப்போட்டியின் ஊடாக, அரசாங்கத் துறை, தனியார் துறை, பாடசாலைகள் மற்றும் நுண்ணளவிலான தொழில்முயற்சிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வெளிப்படுத்தப்படும் சிறந்த செயல்திறன், வினைத்திறன் மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றை மதிப்பீடு செய்து, நாடளாவிய ரீதியில் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதற்கமைய, இலங்கை கடற்படையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, கடற்படை மற்றும் கடல்சார் அகாடமி, கப்பல் கட்டும் தளத்தின் கொமடோர் கண்காணிப்பாளர் அலுவலகம் (கிழக்கு), நீல ஹரித வேலைத் திட்டம், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பிரிவு, இயந்திரப் பரிசோதனைப் பிரிவு மற்றும் கடற்படை படகுகள் நிர்மாணத் தளம் ஆகிய ஆறு (06) நிறுவனங்கள் மற்றும் பிரிவுகள் இந்த மதிப்பீட்டில் பங்கேற்றன. இந்தப் பிரிவுகள் உயர் செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறனுடன் செயற்படுவதற்காக வழங்கப்பட்ட சிறந்த தலைமைத்துவம், சேவைப் பெறுநர்களின் கருத்துக்கள், திட்டமிடல் மற்றும் மூலோபாய நோக்கு, மனிதவள முகாமைத்துவம், செயன்முறைகள் மற்றும் அறிவு முகாமைத்துவம், நிறுவனத்தின் பெறுபேறுகள் மற்றும் பயன்தரு புத்தாக்கத் திட்டங்கள் ஆகியன இந்த உற்பத்தித்திறன் விருதுகளை வழங்குவதற்கான பிரதான மதிப்பீட்டு அளவுகோல்களாக அமைந்தன. மேற்படி அளவுகோல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டுச் செயன்முறையில், அரசாங்கத் துறைகள் மற்றும் திணைக்களங்களுக்கு இடையிலான பிரிவில் முதல் இடங்களைப் பெற்ற நான்கு (04) நிறுவனங்களுள் ஒன்றாக இடம்பெற முடிந்தமை, இலங்கை கடற்படை ஈட்டிய ஒரு தனித்துவமான சாதனை மட்டுமன்றி, அதன் பெருமைமிக்க பாரம்பரியங்களைப் பாதுகாப்பதில் கொண்டுள்ள தொடர்ச்சியான அர்ப்பணிப்பையும் எடுத்துக்காட்டுகிறது. இதேவேளை, திருகோணமலை கடற்படை மருத்துவமனை, தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் 2025/2026 இல் அரசாங்கத் துறையின் நுண் அளவிலான நிறுவனங்கள் பிரிவில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் 2025/2026 இல் அரசாங்கத் துறையின் நுண் அளவிலான நிறுவனங்கள் பிரிவில் இரண்டாம் இடத்தைப் பெற்ற மூன்று (03) நிறுவனங்களுள் ஒன்றாகத் தெரிவுசெய்யப்பட்ட திருகோணமலை கடற்படை மருத்துவமனை, தேசிய உற்பத்தித்திறன் விருதினை வெற்றிகொண்டது. 2026 நவம்பர் மாதம் 08 ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற தேசிய உற்பத்தித்திறன் விருது வழங்கும் விழாவில், ஊவா மாகாண ஆளுநர் சட்டத்தரணி ஜேஎம் கபில ஜயசேகர வினால், திருகோணமலை கடற்படை மருத்துவமனைக்கான குறித்த உற்பத்தித்திறன் விருது, பிரதி பணிப்பாளர் மருத்துவ சேவைகள், சத்திரசிகிச்சை நிபுணர் கெப்டன் துமிந்த சமரவிக்ரம அவர்களிடம் வழங்கி வைக்கப்பட்டது. திருகோணமலை கடற்படை மருத்துவமனையின் சேவைகளை உயர் வினைத்திறன் மற்றும் உற்பத்தித்திறனுடன் முன்னெடுத்துச் செல்வதற்காக வழங்கப்பட்ட தலைமைத்துவம், சேவை பெறுநர்களின் கருத்துக்கள், திட்டமிடல் மற்றும் மூலோபாய நோக்கு, மனிதவள முகாமைத்துவம், செயன்முறைகள் மற்றும் அறிவு முகாமைத்துவம், நிறுவனத்தின் பெறுபேறுகள் மற்றும் பயன்தரு புத்தாக்கத் திட்டங்கள் ஆகியன இந்த உற்பத்தித்திறன் விருதினை வழங்குவதற்கான பிரதான மதிப்பீட்டு அளவுகோல்களாக அமைந்தன. அதற்கமைய, மேற்படி அளவுகோல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டுச் செயன்முறையில், அரசாங்கத் துறையின் நுண் அளவிலான நிறுவனங்கள் பிரிவில் இரண்டாம் இடத்தைப் பெற்ற மூன்று (03) நிறுவனங்களுள் ஒன்றாகத் திருகோணமலை கடற்படை மருத்துவமனை தெரிவுசெய்யப்பட்டமை, சுகாதார மருத்துவ சேவைகளை வழங்குவதில் இலங்கை கடற்படை கொண்டுள்ள தொடர்ச்சியான அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கும் ஒரு தனித்துவமான சாதனையாகும் .

இச்செய்தியைப் பகிரவும்

முதன்மை அறிக்கை

  • News.lk·19 நிமி. முன்தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் 2025/2026 இன் இலங்கை கடற்படை முதலிடம் திருகோணமலை கடற்படை மருத்துவமனை இரண்டாம் நிலை

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நபர்கள்
  • வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ·
  • கெப்டன் துமிந்த சமரவிக்ரம·
  • Anura Kumara Dissanayake·
  • ஜேஎம் கபில ஜயசேகர
நிறுவனங்கள்
  • கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சின்·
  • ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பிரிவு·
  • தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால்·
  • கடற்படை மற்றும் கடல்சார் அகாடமி·
  • கொமடோர் கண்காணிப்பாளர் அலுவலகம்·
  • கடற்படை படகுகள் நிர்மாணத் தளம்·
  • திருகோணமலை கடற்படை மருத்துவமனை·
  • இயந்திரப் பரிசோதனைப் பிரிவு
இடங்கள்
  • இலங்கை கடற்படையைப்·
  • Trincomalee·
  • Sri Lanka·
  • Colombo

ஒரு பார்வையில்

செய்தி நிறுவனங்கள்
1
கட்டுரைகள்
1
முதல் அறிக்கை
10 நவ., 10:19 AM

உள்ளூர் இல் மேலும்

உள்ளூர்
  • வீதிப் பயணம் உயிருக்கு ஆபத்தாகிறதா? - பத்து மாதங்களில் அதிர்ச்சியூட்டும் விபத்துத் தரவுகள்!Hiru News - Tamil·30 நிமி. முன்
  • திருப்பலி!அத தெரண·31 நிமி. முன்
  • இரா திருடனால் மக்கள் மத்தியில் பீதிTamil Mirror·37 நிமி. முன்
  • நீதிமன்ற உத்தியோகத்தர் சேவை நேர்காணலுக்கு அழைப்புTamil Mirror·41 நிமி. முன்
  • இன்றைய ராசிப்பலன் (10.11.2026)!அத தெரண·1 மணி முன்

பிரபலமான செய்திகள்

பிரபலமானவை
  1. 1சட்டவிரோதமாக பூச்சிகளைச் சேகரித்த சீனர்கள் கைது: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!3 ஊடகங்கள்
  2. 2கொழும்பு தேசிய மருத்துவமனை முன்பாக இன்று மருத்துவர்கள் போராட்டம்!6 ஊடகங்கள்
  3. 3நாட்டின் சில பகுதிகளில் 100 மி.மீ. இற்கும் அதிக பலத்த மழை10 ஊடகங்கள்
  4. 4நலினின் 39 ட்ரோன்கள்: CID விசார​ணை13 ஊடகங்கள்
  5. 5ஈரான் மீது பாரிய தாக்குதலுக்கு சாத்தியமில்லை என்கிறார் டிரம்ப்6 ஊடகங்கள்

தலைப்பு வாரியாக உலாவுக

  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • வானிலை
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • கல்வி
  • குற்றம் மற்றும் நீதிமன்றம்
  • சுகாதாரம்