Skip to content
LakFeed
ENසිංதமி

Display

Theme

Text size

Contrast

LakFeedBeta
News
Markets
Exchange ratesEvery bank's buying and selling rate
  • Every bank, today
  • Best rate per currency
  • Browse by bank
  • Sending money home
Gold pricesThe Colombo gold board, every day
  • Today's price
  • 22 karat
  • 24 karat
  • Price by weight
  • Price history
StocksColombo shares, 15 minutes delayed
  • Market today
  • Companies
  • Sectors
  • Company news
FuelPump prices and every revision since 1990
  • Fuel prices
  • Trip cost calculator
OffersTools
Explore
WikiPeople, organisations, places and events in the news
  • All pages
  • People
ENසිංதமி

Display

Text size

Contrast

  • Home
  • Trending
  • Latest
  • Local
  • Politics
  • International
  • Business
  • Sports
  • Science & Tech
  • Weather
  • Gossips
  • Entertainment
  • Education
  • Crime & Courts
  • Health
SourcesSources

News sources (30)

Ada DeranaAda Derana BizAsian MirrorCeylon TodayCitizen NewsColombo GazetteColombo TelegraphDaily FTDaily MirrorEconomyNextESPN CricinfoExaminerFact CrescendoGossip Lanka News EnglishGroundviewsHiru News - EnglishLanka Business OnlineLanka News WebLanka TruthMawrata NewsNews FirstNews.lkNewsWire EnglishOCCRPSiyatha NewsSri Lanka CricketSri Lanka MirrorSunday ObserverThe IslandThePapare English
LakFeed

Sri Lanka, made simple.

Everything Sri Lankans check every day, in one place, in your language.

  • News
  • Exchange rates
  • Gold prices
  • Fuel prices
  • Stocks
  • Card offers
  • Tools
  • Wiki
  • Sitemap
  • FAQ
  • About us
  • Contact
  • Advertise
  • Blog
  • Privacy Policy
  • Terms of Service
  • DMCA

© 2026 LakFeed. All rights reserved.

  1. News
  2. /
  3. Local

1 source·Updated 16m ago

தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் 2025/2026 இன் இலங்கை கடற்படை முதலிடம் திருகோணமலை கடற்படை மருத்துவமனை இரண்டாம் நிலை

தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் 2025/2026 இன் அரசாங்கத் துறைகள் மற்றும் திணைக்களங்களுக்கு இடையிலான பிரிவில் இலங்கை கடற்படை முதலிடத்தைப் பிடித்துள்ளதுடன் திருகோணமலை கடற்படை மருத்துவமனை, தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் 2025/2026 இல் அரசாங்கத் துறையின் நுண் அளவிலான நிறுவனங்கள் பிரிவில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் 2025/2026 இல் அரசாங்கத் துறைகள் மற்றும் திணைக்களங்களுக்கு இடையிலான பிரிவில் முதல் இடங்களைப் பெற்ற நான்கு (04) நிறுவனங்களுள் ஒன்றாகத் தெரிவுசெய்யப்பட்ட இலங்கை கடற்படை, தேசிய உற்பத்தித்திறன் விருதினை வெற்றிப்பெற்றுள்ளது. கௌரவ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் இன்று (2026 நவம்பர் 08) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற தேசிய உற்பத்தித்திறன் விருது வழங்கும் விழாவில், குறித்த உற்பத்தித்திறன் விருதினை கௌரவ ஜனாதிபதி அவர்கள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ அவர்களிடம் வழங்கி வைத்தார். தேசிய உற்பத்தித்திறன் விருதுப் போட்டியானது, கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்படும் வருடாந்த நிகழ்ச்சித்திட்டமாகும். 'க்ளீன் ஸ்ரீலங்கா' தேசிய வேலைத்திட்டத்துடன் இணைந்து முன்னெடுக்கப்படும் இப்போட்டியின் ஊடாக, அரசாங்கத் துறை, தனியார் துறை, பாடசாலைகள் மற்றும் நுண்ணளவிலான தொழில்முயற்சிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வெளிப்படுத்தப்படும் சிறந்த செயல்திறன், வினைத்திறன் மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றை மதிப்பீடு செய்து, நாடளாவிய ரீதியில் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதற்கமைய, இலங்கை கடற்படையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, கடற்படை மற்றும் கடல்சார் அகாடமி, கப்பல் கட்டும் தளத்தின் கொமடோர் கண்காணிப்பாளர் அலுவலகம் (கிழக்கு), நீல ஹரித வேலைத் திட்டம், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பிரிவு, இயந்திரப் பரிசோதனைப் பிரிவு மற்றும் கடற்படை படகுகள் நிர்மாணத் தளம் ஆகிய ஆறு (06) நிறுவனங்கள் மற்றும் பிரிவுகள் இந்த மதிப்பீட்டில் பங்கேற்றன. இந்தப் பிரிவுகள் உயர் செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறனுடன் செயற்படுவதற்காக வழங்கப்பட்ட சிறந்த தலைமைத்துவம், சேவைப் பெறுநர்களின் கருத்துக்கள், திட்டமிடல் மற்றும் மூலோபாய நோக்கு, மனிதவள முகாமைத்துவம், செயன்முறைகள் மற்றும் அறிவு முகாமைத்துவம், நிறுவனத்தின் பெறுபேறுகள் மற்றும் பயன்தரு புத்தாக்கத் திட்டங்கள் ஆகியன இந்த உற்பத்தித்திறன் விருதுகளை வழங்குவதற்கான பிரதான மதிப்பீட்டு அளவுகோல்களாக அமைந்தன. மேற்படி அளவுகோல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டுச் செயன்முறையில், அரசாங்கத் துறைகள் மற்றும் திணைக்களங்களுக்கு இடையிலான பிரிவில் முதல் இடங்களைப் பெற்ற நான்கு (04) நிறுவனங்களுள் ஒன்றாக இடம்பெற முடிந்தமை, இலங்கை கடற்படை ஈட்டிய ஒரு தனித்துவமான சாதனை மட்டுமன்றி, அதன் பெருமைமிக்க பாரம்பரியங்களைப் பாதுகாப்பதில் கொண்டுள்ள தொடர்ச்சியான அர்ப்பணிப்பையும் எடுத்துக்காட்டுகிறது. இதேவேளை, திருகோணமலை கடற்படை மருத்துவமனை, தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் 2025/2026 இல் அரசாங்கத் துறையின் நுண் அளவிலான நிறுவனங்கள் பிரிவில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் 2025/2026 இல் அரசாங்கத் துறையின் நுண் அளவிலான நிறுவனங்கள் பிரிவில் இரண்டாம் இடத்தைப் பெற்ற மூன்று (03) நிறுவனங்களுள் ஒன்றாகத் தெரிவுசெய்யப்பட்ட திருகோணமலை கடற்படை மருத்துவமனை, தேசிய உற்பத்தித்திறன் விருதினை வெற்றிகொண்டது. 2026 நவம்பர் மாதம் 08 ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற தேசிய உற்பத்தித்திறன் விருது வழங்கும் விழாவில், ஊவா மாகாண ஆளுநர் சட்டத்தரணி ஜேஎம் கபில ஜயசேகர வினால், திருகோணமலை கடற்படை மருத்துவமனைக்கான குறித்த உற்பத்தித்திறன் விருது, பிரதி பணிப்பாளர் மருத்துவ சேவைகள், சத்திரசிகிச்சை நிபுணர் கெப்டன் துமிந்த சமரவிக்ரம அவர்களிடம் வழங்கி வைக்கப்பட்டது. திருகோணமலை கடற்படை மருத்துவமனையின் சேவைகளை உயர் வினைத்திறன் மற்றும் உற்பத்தித்திறனுடன் முன்னெடுத்துச் செல்வதற்காக வழங்கப்பட்ட தலைமைத்துவம், சேவை பெறுநர்களின் கருத்துக்கள், திட்டமிடல் மற்றும் மூலோபாய நோக்கு, மனிதவள முகாமைத்துவம், செயன்முறைகள் மற்றும் அறிவு முகாமைத்துவம், நிறுவனத்தின் பெறுபேறுகள் மற்றும் பயன்தரு புத்தாக்கத் திட்டங்கள் ஆகியன இந்த உற்பத்தித்திறன் விருதினை வழங்குவதற்கான பிரதான மதிப்பீட்டு அளவுகோல்களாக அமைந்தன. அதற்கமைய, மேற்படி அளவுகோல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டுச் செயன்முறையில், அரசாங்கத் துறையின் நுண் அளவிலான நிறுவனங்கள் பிரிவில் இரண்டாம் இடத்தைப் பெற்ற மூன்று (03) நிறுவனங்களுள் ஒன்றாகத் திருகோணமலை கடற்படை மருத்துவமனை தெரிவுசெய்யப்பட்டமை, சுகாதார மருத்துவ சேவைகளை வழங்குவதில் இலங்கை கடற்படை கொண்டுள்ள தொடர்ச்சியான அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கும் ஒரு தனித்துவமான சாதனையாகும் .

Share this story

Lead report

  • News.lk·16m agoதேசிய உற்பத்தித்திறன் விருதுகள் 2025/2026 இன் இலங்கை கடற்படை முதலிடம் திருகோணமலை கடற்படை மருத்துவமனை இரண்டாம் நிலை

What this story is about

People
  • வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ·
  • கெப்டன் துமிந்த சமரவிக்ரம·
  • Anura Kumara Dissanayake·
  • ஜேஎம் கபில ஜயசேகர
Organisations
  • கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சின்·
  • ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பிரிவு·
  • தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால்·
  • கடற்படை மற்றும் கடல்சார் அகாடமி·
  • கொமடோர் கண்காணிப்பாளர் அலுவலகம்·
  • கடற்படை படகுகள் நிர்மாணத் தளம்·
  • திருகோணமலை கடற்படை மருத்துவமனை·
  • இயந்திரப் பரிசோதனைப் பிரிவு
Places
  • இலங்கை கடற்படையைப்·
  • Trincomalee·
  • Sri Lanka·
  • Colombo

At a glance

Newsrooms
1
Articles
1
First reported
Nov 10, 10:19 AM

More in Local

Local
  • GMOA plans protest over doctors' economic issues5 sources·39m ago
  • Russian tourist drowns while bathing in sea off Bentota2 sources·53m ago
  • DMT introduces appointments for one-day services5 sources·1h ago
  • Roads affected by landslides and tree falls3 sources·1h ago
  • Kandy Transport Terminal set for Q3 2027 launch3 sources·2h ago

Trending stories

Trending
  1. 1Four Chinese nationals arrested for collecting wildlife species in Sinharaja4 sources
  2. 2Several rivers rise as heavy rains trigger minor flooding and landslides4 sources
  3. 3CB Bars EY Partners from Banking Audits Following Rs. 13.6 Billion NDB Fraud5 sources
  4. 4UN experts urge Sri Lanka to amend proposed anti-terrorism bill to meet human rights standards4 sources
  5. 5Trump says Qatar, Saudi prefer peace in Iran conflict7 sources

Browse by Topic

  • Local
  • Politics
  • International
  • Business
  • Sports
  • Science & Tech
  • Weather
  • Gossips
  • Entertainment
  • Education
  • Crime & Courts
  • Health