1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
18ஆவது ஆண்டாக சிறார்களின் Golf விளையாட்டிற்கு ப்ரிமா அனுசரணை
இலங்கையின் முன்னணி உணவு உற்பத்தி நிறுவனமான ப்ரிமா, சிறுவர்களின் கோல்(f)ப் விளையாட்டு வளர்ச்சிக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருவதன் ஓர் அங்கமாக இலங்கை கனிஷ்ட கோல்(f)ப் சம்பியன்ஷிப் தொடருக்கு 18ஆவது ஆண்டாகவும் தொடர் அனுசரணை வழங்குகின்றது.
சுருக்கம்
>>அயர்லாந்தை வீழ்த்தி சம்பியன் பட்டத்தை வென்றது இலங்கை மகளிர் அணி 2026ஆம் ஆண்டுக்கான இந்த தொடரில் உள்நாட்டு மற்றும் சர்வதேச மட்டங்களில் வளர்ந்து வரும் இளம் கோல்(f)ப் வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். இம்முறை ஒழுங்கு செய்யப்பட்டிருக்கும் தொடர் கனிஷ்ட வீர, வீராங்கனைகளுக்கான உலக தரவரிசையில் (WAGR) புள்ளிகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய தொடராகவும் அமைந்துள்ளது.
