1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
பிரேசில் எதிர்க்கட்சி அபேட்சகர் தப்பிச்செல்ல நாம் உதவவில்லை
பிரேசிலின் ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த பிளாவியோ போல்சோனாரோ அந்நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு தப்பிச் செல்ல டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் உதவி செய்யவில்லை என்று இராஜாங்கச் செயலாளர் மார்கோ ருபியோ தெரிவித்துள்ளார்.
சுருக்கம்
அவர் அமெரிக்காவிற்கு வந்தடைந்ததாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. இந்த நடவடிக்கைகளில் அமெரிக்க அரசாங்கம் நேரடியாக எந்த வகையிலும் ஈடுபடவில்லை என்றும் தெரிவித்துள்ளார். கடந்த ஒக்டோபர் 25 ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, போல்சோனாரோவும் அவரது குடும்பத்தினரும் அமெரிக்காவிற்குள் நுழைய விசா வழங்கப்பட்டதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்த மறுநாளே, அவர் புளோரிடாவின் மியாமி நகரை சென்றடைந்துள்ளார்.