அறிவிப்பு: LakFeed தமிழ்ப் பதிப்பு 2026 டிசம்பர் 31 முதல் நிறுத்தப்படும்.

எங்களிடம் தமிழ் படிக்கத் தெரிந்தவர்கள் யாரும் இல்லை; தமிழ் ஆசிரியர் ஒருவரை நியமிக்கப் போதிய நிதியும் தற்போது இல்லை.

மேலும் படிக்க / Read in English

LakFeed ஒரு சிறிய சுயாதீனத் திட்டம். இங்கு வெளியாகும் உள்ளடக்கத்தின் தரத்தைச் சரிபார்க்க யாரும் இல்லாமல் இந்தப் பதிப்பைத் தொடர்ந்து நடத்துவது சரியல்ல என்று கருதுகிறோம். அந்தத் தேதிக்குப் பிறகு தமிழ்ப் பக்கங்கள் கிடைக்காது. செய்திகள், நாணய மாற்று விகிதங்கள், தங்க விலை உள்ளிட்ட சேவைகள் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் தொடர்ந்து கிடைக்கும். ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும். இதுவரை எங்களுடன் இருந்தமைக்கு நன்றி.

LakFeed's Tamil edition closes on 31 December 2026. LakFeed is a small independent project. Nobody here reads Tamil, and we cannot currently afford to hire a Tamil editor. With no one able to check what appears here, we do not think it is right to keep this edition running. After that date the Tamil pages will no longer be available. News, exchange rates, gold prices and the rest of the site stay available in English and Sinhala. We are sorry for the inconvenience, and thank you for reading.

Englishසිංහල

உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

தீம்

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed
செய்திகள்
சந்தைகள்
மாற்று விகிதங்கள்ஒவ்வொரு வங்கியின் கொள்முதல், விற்பனை விகிதங்கள்
  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்
தங்க விலைகொழும்பு தங்க விலை, தினமும்
  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
பங்குகள்ஆங்கிலம்Colombo share prices, indices and companies
  • இன்றைய சந்தை
  • நிறுவனங்கள்
  • துறைகள்
  • நிறுவனச் செய்திகள்
எரிபொருள்பம்ப் விலைகளும் 1990 முதல் ஒவ்வொரு திருத்தமும்
  • எரிபொருள் விலைகள்
  • பயணச் செலவு கணிப்பான்
சலுகைகருவிகள்
ஆராயுங்கள்
விக்கிசெய்திகளில் வரும் நபர்கள், நிறுவனங்கள், இடங்கள், நிகழ்வுகள்
  • அனைத்துப் பக்கங்கள்
  • நபர்கள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

  • முதல் பக்கம்
  • பிரபலமானவை
  • சமீபத்திய
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • வானிலை
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • கல்வி
  • குற்றம் மற்றும் நீதிமன்றம்
  • சுகாதாரம்
ஆதாரங்கள்ஆதாரங்கள்

செய்தி ஆதாரங்கள் (14)

Asian MirrorCitizen NewsFact Crescendo தமிழ்Global Tamil NewsHiru News - TamilIBC TamilLanka News Web தமிழ்Lanka TruthNews First - தமிழ்News.lkTamil MirrorThePapare TamilThinakaranஅத தெரண
LakFeed

இலங்கை, எளிமையாக.

இலங்கையர்கள் தினமும் பார்க்கும் அனைத்தும், ஒரே இடத்தில், உங்கள் மொழியில்.

  • செய்திகள்
  • மாற்று விகிதங்கள்
  • தங்க விலை
  • எரிபொருள் விலைகள்
  • பங்குகள்
  • அட்டைச் சலுகைகள்
  • கருவிகள்
  • விக்கி
  • தள வரைபடம்
  • FAQ
  • About us
  • Contact
  • Advertise
  • Blog
  • Privacy Policy
  • Terms of Service
  • DMCA

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

  1. செய்திகள்
  2. /
  3. சர்வதேசம்

1 ஊடகம்·14 அக்., 2026 புதுப்பிக்கப்பட்டது

சவுதிக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி

சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நீக்குவதற்கு சவுதி உயர்நீதிமன்றம் எடுத்தத் தீர்மானத்தை வரவேற்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்தத் தீர்ப்பு அனோஜனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இந்த விவகாரத்தில் அக்கறையுடன் செயற்பட்ட அனைத்து இலங்கையர்களுக்கும் மிகப்பெரிய ஒரு ஆறுதல் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். இதற்காக ஒத்துழைப்பு வழங்கிய சவுதி அரேபிய அரசுக்கு விசேட நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாகவும் இந்தச் சட்ட நடவடிக்கைகளுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட இரு நாடுகளின் இராஜதந்திரிகள், அரச அதிகாரிகள் மற்றும் சட்டக் குழுக்களுக்கு இலங்கை அரசின் பாராட்டுக்கள் உரித்தாகுவதாகவும் ஜனாதிபதி தமது எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். அனோஜனுக்கு எதிராக காணப்படும் எஞ்சிய சட்ட நடைமுறைகள் பூர்த்தியாகும் வரை அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் தொடர்ந்தும் வழங்க அரசாங்கம் தயாராக உள்ளதாகவும் வாழ்வாதாரத்திற்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் எந்தவொரு இலங்கையருக்கும் "தாம் தனித்து விடப்பட்டுள்ளோம்" என்ற எண்ணம் ஏற்படக் கூடாது எனவும் ஜனாதிபதி தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார். இதேவேளை, சவுதி அரேபியாவில் சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை இரத்துச் செய்யப்பட்டமை தொடர்பாக இலங்கைக்கு இந்தியா வாழ்த்து தெரிவித்துள்ளது. சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை இரத்துச்செய்ய இந்தியா நேரடியாக தலையீடு செய்ய வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். எனினும், இலங்கை அரசாங்கம் இந்தியாவிடம் அத்தகைய ஒரு வேண்டுகோளை உத்தியோகபூர்வமாக முன்வைக்கவில்லை. இந்த நிலையில் இலங்கை அரசாங்கம் தனித்து இராஜதந்திர மற்றும் சட்ட நடவடிக்கைகள் ஊடாக அனோஜனின் மரண தண்டனையை குறைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தது. இலங்கை அரசாங்கம் இராஜதந்திர ரீதியில் இந்த விடயத்தை சிறப்பாக கையாண்டு அவரது மரண தண்டனையை இரத்துச் செய்துகொண்டமை தொடர்பாக இந்தியா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. இதேவேளை, அயல் நாட்டிற்கு முதலிடம் அளிக்கும் தமது கொள்கையின் கீழ் இலங்கைக்கு எப்போதும் முக்கியத்துவம் வழங்கப்படுவதாக இந்தியா வலியுறுத்தியுள்ளது. இலங்கை மக்களில் 79 சதவீதமானோர் இந்தியா தொடர்பில் சாதகமான நிலைப்பாட்டை கொண்டிருப்பதாக அண்மைய ஆய்வொன்று உறுதிப்படுத்தியமை இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான உறவை பிரதிபலிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே, சிவராசா அனோஜன் விவகாரத்தில் தலையீடு செய்த ஜனாதிபதிக்கும் சவுதி அரசாங்கத்துக்கும் சர்வதேச இந்துமத பீடம் வாழ்த்து தெரிவித்துள்ளது. இலங்கை வாழ் மக்களுக்கும் இந்த செய்தி மகிழ்ச்சியை தந்துள்ளதாக சர்வதேச இந்துமத பீடத்தின் செயலாளர் கலாநிதி சிவஸ்ரீ ராமச்சந்திர பாபு ஷர்மா தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார். இதனிடையே சிவராசா அனோஜனின் வழக்கில் சாதகமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை மனப்பூர்வமாக வரவேற்பதாக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தனது பேஸ்புக் தளத்தில் பதிவிட்டுள்ளார். தேவையான அனைத்து சட்ட நடைமுறைகளும் உரிய சட்டச் செயன்முறைகளும் முழுமையாக நிறைவு செய்யப்பட்டு சிவராசா அனோஜன் பாதுகாப்பாக இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு அவரது குடும்பத்துடன் மீண்டும் இணைக்கப்படும் நாளிலேயே எமது முயற்சி முழுமை பெறும் எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.

இச்செய்தியைப் பகிரவும்

முதன்மை அறிக்கை

  • News First - தமிழ்·14 அக்., 2026சவுதிக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி

சுருக்கம்

இந்தத் தீர்ப்பு அனோஜனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இந்த விவகாரத்தில் அக்கறையுடன் செயற்பட்ட அனைத்து இலங்கையர்களுக்கும் மிகப்பெரிய ஒரு ஆறுதல் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

News First - தமிழ் இலிருந்து சுருக்கப்பட்டது

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நபர்கள்
  • சிவஸ்ரீ ராமச்சந்திர பாபு ஷர்மா·
  • இராசமாணிக்கம் சாணக்கியன்·
  • அனுர குமார திசாநாயக்க·
  • சிவராசா அனோஜன்
நிறுவனங்கள்
  • இலங்கை தமிழ் அரசுக் கட்சியின்·
  • சர்வதேச இந்துமத பீடத்தின்·
  • சர்வதேச இந்துமத பீடம்·
  • சவுதி உயர்நீதிமன்றம்
இடங்கள்
  • சவூதி அரேபியாவில்·
  • Sri Lanka·
  • India·
  • சவுதி

ஒரு பார்வையில்

செய்தி நிறுவனங்கள்
1
கட்டுரைகள்
1
முதல் அறிக்கை
14 அக்., 7:52 PM

சர்வதேசம் இல் மேலும்

சர்வதேசம்
  • யுக்ரைனில் இடிபாடுகளுக்குள் 14 மணிநேரம் சிக்கியிருந்த 7 வயது சிறுவன் உயிருடன் மீட்பு!Hiru News - Tamil·2 மணி முன்
  • உடன்பாடு எட்டப்படாவிட்டால் புத்தாண்டில் ஈரான் மீது மீண்டும் போர்: டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை2 ஊடகங்கள்·3 மணி முன்
  • சவூதி அரேபியாவின் ராபிக் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ஹூதி அமைப்பு தாக்குதல்Hiru News - Tamil·3 மணி முன்
  • இந்தியாவின் தொன்மை வரலாறு பிரமிக்க வைக்கிறது..! ரஷ்ய ஜனாதிபதி புதின் புகழாரம்IBC Tamil·10 மணி முன்
  • 13 இலட்சம் ரூபாய் சிற்றூந்துக்குப் பதிலாக 10 இலட்சம் ரூபாய் சிற்றூந்து கிடைத்ததால் திருமணத்தை நிறுத்திய மணமகன்!Hiru News - Tamil·11 மணி முன்

பிரபலமான செய்திகள்

பிரபலமானவை
  1. 1நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 8 ஊடகங்கள்
  2. 2விசா விலக்கு உடன்படிக்கையில் இலங்கையும் தாய்லாந்தும் கையொப்பம்!3 ஊடகங்கள்

தலைப்பு வாரியாக உலாவுக

  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • வானிலை
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • கல்வி
  • குற்றம் மற்றும் நீதிமன்றம்
  • சுகாதாரம்