1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
சீனா, ஜப்பான் உள்ளிட்ட 14 நாடுகளுக்கு அமெரிக்காவால் புதிய தீர்வை வரி அறிவிப்பு
சீனா, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம் உட்பட 14 முக்கிய வர்த்தகப் பங்காளர்கள் மீது அமெரிக்காவின் ட்ரம்ப் நிர்வாகம் புதிய தீர்வை வரி விதிப்பை நேற்று முன்தினம் அறிவித்துள்ளது.
சுருக்கம்
இந்த நாடுகள் ஊக்குவிப்பதாகக் கூறப்படும் கைத்தொழில்துறை உற்பத்தித் திறனைக் கட்டுப்படுத்தவென 20 சதவீதம் முதல் 40 சதவீதம் வரையிலான தீர்வை வரி விகிதங்களை அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகத்தினால் முன்மொழியப்பட்டிருக்கிறது. 'இந்த சுங்கவரிகள் அமெரிக்கத் தொழிலாளர்களுக்கு சமமான வாய்ப்புகளை உருவாக்கி, உலகப் பொருளாதாரத்திற்கு ஒரு புதியதும் மேலும் நிலையானதுமான பாதையை வகுக்குமென வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரீர் கூறியுள்ளார்.