1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
கப்பல் பாதுகாப்பு குழுக்களின் நடவடிக்கை (OBST) திறனை மேம்படுத்து குறித்து பாதுகாப்புத் பிரதி அமைச்சர் ஆலோசனை
இலங்கை கடற்படையின் கப்பல் பாதுகாப்பு குழுக்கள் (Onboard Security Team - OBST) தொடர்பான நடவடிக்கை மற்றும் நிதி முன்னேற்றங்களை மீளாய்வு செய்வதற்கான விஷேட கூட்டம், அண்மையில் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
சுருக்கம்
ஆய்வின் போது கண்டறியப்பட்ட சிக்கல்கள், அவற்றைச் சரிசெய்வதற்கான நடவடிக்கைகள், கப்பல் பாதுகாப்பு குழுக்களின் (OBST) நடவடிக்கை மற்றும் நிதி முன்னேற்றம், மற்றும் வருவாயை அதிகரிப்பதற்கான வழிகள் போன்றவை இக்கூட்டத்தின் போது விரிவாக ஆராயப்பட்டன. இந்த நடவடிக்கைகள் தொடர்ந்து தடையின்றியும், திறமையாகவும், பயனுள்ள வகையிலும் முன்னெடுக்கப்படுவதை உறுதி செய்யுமாறு பிரதி அமைச்சர் உரிய அறிவுறுத்தல்களை வழங்கினார்.
