1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
வரவு - செலவு திட்டத்தில் சில வரிகள் குறைக்கப்படும்
எதிர்வரும் வரவு - செலவு திட்டத்தில் சில வரிகள் குறைக்கப்படும் என ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பு பி.டி. சிறிசேன மைதானத்தில் நடைபெற்ற தேசிய புத்திஜீவிகள் அமைப்பின் மாநாட்டில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் கூறினார். எதிர்வரும் வரவு - செலவு திட்டத்தில் மேலும் சில வரிகளை குறைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். கடந்த 2 வருடங்களை ஒப்பிடும் போது, பொருளாதார ரீதியில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை நோக்கிய பயணத்திற்கு தேவையான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இலங்கையில் அண்மை காலங்களில் பதிவாகிய மிகக் குறைந்த வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை காணப்பட்ட ஆண்டாக கடந்த வருடம் பதிவாகியுள்ளதாகவும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை பொறுப்பேற்றதன் பின்னர் புதிதாக எந்த வரியையும் விதிக்கவில்லை எனவும், ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த வரிகளை கணிசமான அளவு குறைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அரச வருமான இலக்குகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் சில வரிகள் குறைக்கப்படுமென ஜனாதிபதி உறுதியளித்தார்.
சுருக்கம்
எதிர்வரும் வரவு - செலவு திட்டத்தில் சில வரிகள் குறைக்கப்படும் என ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். சிறிசேன மைதானத்தில் நடைபெற்ற தேசிய புத்திஜீவிகள் அமைப்பின் மாநாட்டில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் கூறினார். கடந்த 2 வருடங்களை ஒப்பிடும் போது, பொருளாதார ரீதியில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை நோக்கிய பயணத்திற்கு தேவையான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
-561395.jpg&w=640&q=75)