1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
யாழ்ப்பாணம் நல்லூரில் மாவீரர்களின் கல்வெட்டுக்கள் அங்குரார்ப்பணம்
யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக உள்ள பகுதிகளில் மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மக்கள் அஞ்சலிக்காக இன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டன.
சுருக்கம்
குறித்த நினைவாலயம் நவம்பர் 27ஆம் திகதி வரையில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. 1982 ஆம் ஆண்டு முதல் விடுதலை அமைப்பில் இணைந்து விதையாகியவர்களின் விபரங்களுடன், தனிக்குழுக்களாகவும், ஈரோஸ் அமைப்பிலிருந்தும், எல்லை வீரர்களாகவும், உதவி வீரர்களாகவும், நாட்டுப்பற்றாளர்களாகவும், மாமனிதர்களாகவும் விதையாகிய உறவுகளின் விபரங்களையும் உள்ளடக்கி இவ் வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தச் செய்தி எதைப் பற்றியது
நிறுவனங்கள்
இடங்கள்
