1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
விடுதலைப் புலிகளின் தலைவர்களை உயிருடன் பிடித்திருந்தால் வடக்கில் மீண்டும் யுத்தம் : சரத் பொன்சேகா பகிரங்கம்
விடுதலைப் புலிகளின் தலைவர்களை உயிருடன் கைதுசெய்திருந்தால் வடக்கில் மீண்டும் யுத்தம் ஆரம்பமாகியிருக்கும் என முன்னாள் இராணுவத் தளபதியும் ஃபீல்ட் மார்ஷலுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
சுருக்கம்
பிரபாகரன் சரணடைவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டபோதும், அவர் தன்மானப் பிடிவாதத்துடன் அதனை நிராகரித்து இறுதிவரை போரிட்டு உயிரிழக்கத் தீர்மானித்ததாகவும் சரத் பொன்சேகா சுட்டிக்காட்டினார். அந்தச் சந்தர்ப்பத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர்களுடன் சரணடைவது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அவர்கள் சரணடைந்தால் பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
