1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
சிறார் மீதான அத்துமீறல் : இத்தாலியில் 57 பாதிரியார்களுக்கு சிறை!
இத்தாலியில் 57 பாதிரியார்கள் சிறார் மீதான அத்துமீறல் வழக்கில் குற்றவாளிகளாக இனம்காணப்பட்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளனர். கடந்த இருபது ஆண்டுகளில் இந்த சம்பவம் நடந்தேறியுள்ளது.
சுருக்கம்
நேற்று புதன்கிழமை (நவம்பர் 25) நடைபெற்ற இத்தாலிய ஆயர்கள் மாநாட்டில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பொலோக்னா பல்கலைக்கழகம் மற்றும் புளோரன்ஸில் உள்ள 'இன்ஸ்டிட்யூட்டோ டெக்லி இன்னோசென்டி' ஆகிய அமைப்புகளின் ஆய்வாளர்கள் இணைந்து இந்த அறிக்கையை தயாரித்தனர். மேலும், திருச்சபை தரப்பில் 218 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, சுமார் 70 சதவீதம் பேர் குற்றவாளிகள் எனக் கண்டறியப்பட்டனர்.
