தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் என கூறப்படும் நபர் மீது சிறைக்கைதியால் கூரிய ஆயுதத்தினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
களுத்துறை சிறைச்சாலைக்குள் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் குறித்த நபரின் காதில் காயமேற்பட்டுள்ள நிலையில், நாகொட வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டதன் பின்னர் அவர் மீண்டும் சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, ஊடகவியலாளர் என கூறப்படும் சந்தேகநபர் இன்று(30) சட்ட வைத்தியரிடம் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
சம்பவம் தொடர்பில் களுத்துறை வடக்கு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பதுளை சிறைச்சாலையிலிருந்து களுத்துறை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதி ஒருவரின் காதுப் பகுதியை, அங்கிருந்த மற்றொரு கைதி கூர்மையான ஆயுதத்தால் வெட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சக கைதியால் தாக்கப்பட்ட கைதி உடனடியாகக் களுத்துறை நாகொடை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் கைதிகளுக்கிடையில் இந்த பிரச்சனை வந்ததது தொடர்பான எந்த தகவலும் கிடைக்கவில்லை.
IBC Tamil වෙතින් සාරාංශගත කර ඇත
යතුරු පද- களுத்துறை2
- கைதியால்2
- சிறைச்சாலைக்குள்
- அளிக்கப்பட்டதன்
- சிறைச்சாலையில்
- சிறைச்சாலைகள்
- ஆயுதத்தினால்
- ஊடகவியலாளர்
- உடனடியாகக்
- கூறப்படும்
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.
මාධ්ය ආයතන 2ක් මෙම පුවත වාර්තා කර ඇත
සම්පූර්ණ වාර්තා