சிறைச்சாலைக்குள் கைதியால் தாக்குதல்
தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் என கூறப்படும் நபர் மீது சிறைக்கைதியால் கூரிய ஆயுதத்தினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. களுத்துறை சிறைச்சாலைக்குள் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் குறித்த நபரின் காதில் காயமேற்பட்டுள்ள நிலையில், நாகொட வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டதன் பின்னர் அவர் மீண்டும் சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதனிடையே, ஊடகவியலாளர் என கூறப்படும் சந்தேகநபர் இன்று(30) சட்ட வைத்தியரிடம் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். சம்பவம் தொடர்பில் களுத்துறை வடக்கு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
