"பாடசாலை போசாக்கு வேலைத்திட்டத்திற்காக 2026 ஆம் ஆண்டில் அரசாங்கம் 33,600 மில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளது" பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய -
இலங்கையின் முதலாவது பாடசாலை போசாக்கு மாநாட்டின் போது **** 2026 ஆம் ஆண்டிற்கான பாடசாலை போசாக்கு வேலைத்திட்டத்திற்காக அரசாங்கம் 33,600 மில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளதுடன், இந்த வேலைத்திட்டத்தை நாட்டின் சுகாதாரம் மற்றும் உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்தும் விரிவான வேலைத்திட்டமாக மாற்றுவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். 2026.10.02 அன்று கொழும்பில் நடைபெற்ற "தேசிய பாடசாலை போசாக்கு மாநாடு 2026" இல் கலந்துகொண்ட போதே கல்வி அமைச்சரான பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
