எராஜ் பெர்னாண்டோவின் இறுதிக்கிரியைகள் தொடர்பில் வௌியான தகவல்
சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளன.
சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளன.
அன்றையதினம் காலை பொரளையில் உள்ள தனியார் மலர்ச்சாலையொன்றில் அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளதாக அவரது குடும்ப உறவினர்கள் தெரிவிக்கின்றனர். ஹம்பாந்தோட்டை நகர சபையின் முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோ, திம்பிரிகஸ்யாயவில், தாம் வசித்து வந்த வீடமைப்புத் தொகுதியில் உள்ள அவரது வீட்டில் உயிரிழந்துள்ளதாக பம்பலப்பிட்டி பொலிஸாருக்கு நேற்று (02) காலை தொலைபேசி அழைப்பு ஒன்று கிடைத்துள்ளது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.