1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட பெருமளவிலான பீடி இலைகள் கற்பிட்டியில் சட்டத்தின் பிடியில்
இலங்கை கடற்படையினரால், கற்பிட்டி கப்பலடி மற்றும் சின்னமுக்கரை கடற்கரைப் பகுதிகளை அண்மித்து நேற்று (2026 நவம்பர் 20) மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட சுமார் 460 கிலோகிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டன.
சுருக்கம்
இதற்கமைய, வடமேற்கு கடற்படை கட்டளையின் கீழ் இயங்கும் இலங்கை கடற்படைக் கப்பலான விஜய நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது, கப்பலடி மற்றும் சின்னமுக்கரை கடற்கரைப் பகுதிகளில் காணப்பட்ட சந்தேகத்திற்கிடமான பன்னிரண்டு (12) பொதிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
